ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் களமிறங்குதுஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் களமிறங்குது ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.45 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.45 ...
அடுத்த 2 ஆண்டுகளில்...பங்கு சந்தை பட்டியலில் இணைகின்றன 1,000 சிறிய, நடுத்தர நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2018
01:13

புதுடில்லி;அடுத்த இரு ஆண்­டு­களில், இந்­திய பங்­குச் சந்­தை­களில், எஸ்.எம்.இ., பிரி­வில் உள்ள சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களின் எண்­ணிக்கை, 1,000 ஆக அதி­க­ரிக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­களில், 2012 மார்ச்­சில், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களின் பங்கு வெளி­யீடு மற்­றும் வர்த்­த­கத்­திற்கு, எஸ்.எம்.இ., என்ற, தனிப்­பி­ரிவு துவக்­கப்­பட்­டது.
இதில், குறைந்­த­பட்­சம், 1 கோடி ரூபாய் பங்கு மூல­த­னத்­து­டன், மூன்று ஆண்­டு­க­ளாக செயல்­படும் நிறு­வ­னங்­கள், பங்கு வெளி­யீடு மேற்­கொண்டு, பங்கு வர்த்­த­கத்­தில் இணை­ய­லாம்.குறைந்த மூல­த­னம் கொண்ட சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள், அவற்­றின் வர்த்­த­கம் மற்­றும் விரி­வாக்­கத் திட்­டங்­க­ளுக்கு, கடன் பெறா­மல், பங்கு வெளி­யீடு மூலம் நிதி திரட்­டிக் கொள்ள, எஸ்.எம்.இ., பிரிவு உத­வு­கிறது.
இத­னால், இப்­பி­ரி­வில் புதிய பங்கு வெளி­யீ­டு­கள், ஆண்­டு­தோ­றும் அதி­க­ரித்து வரு­கின்றன. 2017ல், 132 சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், சாதனை அள­வாக, 1,785 கோடி ரூபாய் திரட்டி உள்ளன.
இது, 2016ல், 66 நிறு­வ­னங்­கள், 540 கோடி ரூபாய் திரட்­டி­யதை விட, மூன்று மடங்கு அதி­கம்; ஐந்து ஆண்­டு­களில் திரட்­டிய, 1,315 கோடி ரூபாயை விட, அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.இது குறித்து, கின்­னஸ் கார்ப்­ப­ரேட் அட்­வை­சரி சர்­வீ­சஸ் நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­களில், எஸ்.எம்.இ., பிரி­வில், பங்­கு­களை பட்­டி­ய­லிட்­டுள்ள நிறு­வ­னங்­கள் எண்­ணிக்கை, 350ஐ நெருங்கி உள்­ளது. இது, அடுத்த இரு ஆண்­டு­களில், 1,000 ஆக அதி­க­ரிக்­கும்.
விரி­வாக்­கம் மற்­றும்நடை­முறை மூல­தனதேவை­க­ளுக்கு, பெரு­ம­ளவு கடனை நம்­பி­யி­ருந்த சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களின் கொள்­கை­யில், மிகப்­பெ­ரிய மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. அவை, ஆர்­வ­மு­டன், எஸ்.எம்.இ., பிரி­வில் பங்கு வெளி­யீடு மேற்­கொள்­கின்றன. இது, நாட்­டின் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறை வளர்ச்­சி­யில், மிகப்­பெ­ரிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தும்.பல நிறு­வ­னங்­கள், சிறப்­பாக வளர்ச்சி கண்டு, மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­களின் பட்­டி­ய­லுக்கு மாறி வரு­கின்றன. எனவே, இச்­சந்­தை­களின் நுழை­வா­யி­லாக, எஸ்.எம்.இ., பிரிவு விளங்­கு­கிறது என்­றால், அது மிகை­யல்ல.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
விலை உயர்வு
கடந்த ஆண்டு, மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­களின், எஸ்.எம்.இ., பிரி­வில், 39 சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களின் பங்­கு­கள், வர்த்­த­கம் துவங்­கிய நாளன்றே, 20 சத­வீத விலை உயர்வு வரம்பை எட்­டின.ஐந்து பங்கு வெளி­யீ­டு­களில், ௧௦0 மடங்­கிற்­கும் அதி­க­மாக, விண்­ணப்­பங்­கள் குவிந்­தன.மும்பை பங்­குச் சந்­தை­யின், 'சென்­செக்ஸ்' மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­யின், 'நிப்டி' குறி­யீ­டு­கள், 2017ல், முறையே, 27 சத­வீ­தம் மற்­றும் 28 சத­வீ­தம் வளர்ச்சி கண்­டுள்ளன. அதே வேளை­யில், எஸ்.எம்.இ., குறி­யீ­டு­கள் வளர்ச்சி, முறையே, 89 சத­வீ­தம் மற்­றும் 67 சத­வீ­த­மாக உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)