பதிவு செய்த நாள்
10 ஜன2018
04:12

புதுடில்லி:நடப்பு, 2017 - 18ம் நிதியாண்டின், ஏப்., - டிச., வரையிலான, ஒன்பது மாதங்களில், நேரடி வரி வருவாய், நிகர அளவில், 18.2 சதவீதம் அதிகரித்து, 6.56 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, மத்திய பட்ஜெட் இலக்கு அளவான, 9.80 லட்சம் கோடி ரூபாயில், 67 சதவீதமாகும்.இதே காலத்தில், மொத்த நேரடி வரி வருவாய், 12.6 சதவீதம் அதிகரித்து, 7.68 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், கூடுதல் வரி செலுத்தியோருக்கு, 1.12 லட்சம் கோடி ரூபாய் திரும்ப அளிக்கப்பட்டு உள்ளது.முன்கூட்டிய வரி வருவாய், 12.7 சதவீதம் உயர்ந்து, 3.18 லட்சம் கோடி ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.
இதில், நிறுவனங்கள் மற்றும் தனிநபர் வாயிலான வசூல் வளர்ச்சி, முறையே, 10.9 சதவீதம் மற்றும் 21.6 சதவீதமாக உள்ளது.நேரடி வரி விதிப்பின் கீழ், தனிநபர் வருமான வரி, செல்வ வரி, கார்ப்பரேட் நிறுவனங்கள் வரி ஆகியவை அடங்கி உள்ளன.நடப்பு நான்காம் காலாண்டில், பட்ஜெட் இலக்கை எட்ட, இன்னும், 3.24 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரி வசூலிக்கப்பட வேண்டும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|