பதிவு செய்த நாள்
13 ஜன2018
00:08

புதுடில்லி:காய்கறிகள், பழங்கள், எரிபொருள் விலை உயர்வால், நாட்டின் சில்லரை பணவீக்கம்,2017 டிசம்பரில், 5.21 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது குறித்து, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
டிசம்பரில், சில்லரை பணவீக்கம், 5.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, நவம்பரில், 4.88 சதவீதமாக இருந்தது. 2016 டிசம்பரில், சில்லரை பணவீக்கம், 3.41 சதவீதமாக இருந்தது.உணவுப் பொருட்கள் பணவீக்கம், 2017 டிசம்பரில், 4.96 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, நவம்பரில், 4.35 சதவீதமாக இருந்தது. 2016 டிசம்பரில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், 1.37 சதவீதமாக இருந்தது. காய்கறிகள், பழங்கள், முட்டை, எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது. பருப்பு மற்றும் தானிய வகைகள் விலை குறைந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், உணவு மற்றும் பானங்கள் சில்லரை பணவீக்கம், 4.85 சதவீதமாக உள்ளது. ஆடை மற்றும் காலணி பணவீக்கம், 4.80 சதவீதம்; குடியிருப்பு பணவீக்கம், 8.25 சதவீதம்; எரிபொருள் பணவீக்கம், 7.90 சதவீதம் மற்றும் இதர பொருட்கள் பணவீக்கம், 3.79 சதவீதமாக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த, 2016 ஜூலையில், சில்லரை பணவீக்கம், 6.07 சதவீதம் என்ற அளவில் உச்சத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|