பதிவு செய்த நாள்
13 ஜன2018
00:11

புதுடில்லி:நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 17 மாதங்களில் இல்லாத வகையில், 2017 நவம்பரில், 8.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, அக்டோபரில், 2.2 சதவீதமாக இருந்தது.கடந்த, 2016 ஜூனில், தொழில் துறை உற்பத்தி, அதிகபட்சமாக, 8.9 சதவீத வளர்ச்சியை கண்டிருந்தது.
தொழில் துறை உற்பத்தி குறியீட்டை கணக்கிடுவதில், தயாரிப்புத் துறை, பெரும்பான்மை பங்கை கொண்டுள்ளது. 2017 நவம்பரில், தயாரிப்புத் துறை உற்பத்தி, 10.2 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, அக்டோபரில், 2.5 சதவீதம்; 2016 நவம்பரில், 4.8 சதவீதமாக இருந்தது.
பொறியியல் சாதனங்கள் துறை உற்பத்தி வளர்ச்சி, 9.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, அக்டோபரில், 6.8 சதவீதமாக இருந்தது.இதே காலத்தில், நுகர்வோர் சாதனங்கள் துறை உற்பத்தி, மைனஸ், 6.9 சதவீத பின்னடைவில் இருந்து, 2.9 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. சுரங்கத் துறை உற்பத்தியும், 0.2 சதவீத பின்னடைவில் இருந்து, 1.1 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. மின் உற்பத்தி, 3.2 சதவீதத்தில் இருந்து, 3.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.கடந்த, 2015 செப்டம்பரில், தொழில் துறை உற்பத்தி, 3.6 சதவீதமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|