பதிவு செய்த நாள்
13 ஜன2018
00:14

மும்பை:முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், வலைதளங்களில் மட்டும் புழங்கக்கூடிய, ‘ஜியோ காயின்’ எனப்படும், மெய்நிகர் கரன்சியை வெளியிட திட்டமிட்டு உள்ளது.
முகேஷ் அம்பானியின் மகன், ஆகாஷ் அம்பானியின் தலைமையில், ‘ஜியோ காயின்’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.இதற்காக, துடிப்பான, 50 இளம் வல்லுனர்கள் குழுவை தேர்வு செய்யும் பணியில், ‘ஆர்ஜியோ’ நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இது குறித்து, இதன் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆகாஷ் அம்பானி, ‘பிளாக் செயின்’ தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்படும் மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனையில் களமிறங்க ஆர்வமுடன் உள்ளார்.இந்த தொழில்நுட்பம் மூலம், தொலை தொடர்பு துறையில், ‘ஸ்மார்ட் அழைப்புகள்’ எனப்படும், மேம்பட்ட சேவைகள், தகவல் பரிவர்த்தனை வசதிகளை, வாடிக்கையாளர்கள் பெறலாம்.தொலை தொடர்பு சேவை மட்டுமின்றி, நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள, செயற்கை நுண்ணறிவு மற்றும் சாதனங்கள் இடையிலான, இணைய பயன்பாடு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் சார்ந்த பொழுதுபோக்கு திட்டங்களுக்கும், ‘ஜியோ காயின்’ மெய்நிகர் கரன்சியை பயன்படுத்த முடியும்.
இதன் மூலம், ரிலையன்ஸ் குழுமத்தின் மிக முக்கியமான அங்கமாக, ஆர்ஜியோ நிறுவனம் உருவெடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொலை தொடர்பு துறையில், குறுகிய காலத்தில், ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு, சிம்ம சொப்பனமாக, ஆர்ஜியோ நிறுவனம் உருவெடுத்து உள்ளது.இந்நிலையில், மெய்நிகர் கரன்சி தொழில்நுட்பத்திலும் களமிறங்கி கலக்க உள்ளதால், இதை சமாளிக்க வேண்டிய நிலை, போட்டி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|