ஜி.எஸ்.டி.,அறி­வோம் – தெளி­வோம்ஜி.எஸ்.டி.,அறி­வோம் – தெளி­வோம் ... ‘ஜி.எஸ்.டி., நெட்வொர்க்’ நிறுவனம் அறிவிப்பு:சரக்கு போக்குவரத்துக்கு, ‘இ – வே பில்’:பிப்., 1 முதல் அமலுக்கு வருகிறது ‘ஜி.எஸ்.டி., நெட்வொர்க்’ நிறுவனம் அறிவிப்பு:சரக்கு போக்குவரத்துக்கு, ‘இ – ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
உலகின் அதிவேக எஸ்.யு.வி.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2018
01:18

இத்தாலியைச் சேர்ந்த, சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான, 'லாம்பர்கினி' சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள, 'யுருஸ்' எனும், சூப்பர் எஸ்.யு.வி., வாகனம், இந்தியாவில், 11ல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் ஷோரூம் துவக்க விலை, 3 கோடி ரூபாய். இது, லாம்பர்கினியின், பென்டேய்கா போன்றே தோற்றம் அளிக்கிறது. இதன் இருக்கைகளை, 12 விதங்களில் மாற்றி அமைக்கலாம்.
இதில், 650 எச்.பி., திறனை உற்பத்தி செய்யும், சக்தி வாய்ந்த, '4.0 லி., டுவின் டர்போ வி8' இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது; எட்டு கியர்கள் உள்ளன. இதை, உலகின் மிக வேகமான, எஸ்.யு.வி., எனக் கூறியுள்ள லாம்பர்கினி, புறப்பட்ட, 3.6 வினாடி யில், 100 கி.மீ., வேகத்தையும்; 12.8 வினாடியில், 200 கி.மீ., வேகத்தையும் எட்டும் என, தெரிவித்துஉள்ளது.
பஜாஜ்:'டிஸ்கவர்' பைக்குகள் அறிமுகம்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம், அதன், 'டிஸ்கவர்' ரக பைக்குகளில், இரு புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. முதலாவதாக, 'டிஸ்கவர் - 110' மாடல். அடுத்தது, 'டிஸ்கவர் - 125.' இதில், டிஸ்கவர் 110ன் ஷோரூம் விலை, 50,496 ரூபாயில் இருந்து துவங்குகிறது. டிஸ்கவர் 125ன் விலை, 53,491 - 56,314 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இதில், 110 மாடலில், 115.5 'சிசி' இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. டிஸ்கவர் - 125 மாடலில், 124.5 'சிசி' இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இவற்றில், 'டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் டிஸ்பிளே' உள்ளது.
இது குறித்து, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், இருசக்கர வாகன பிரிவு தலைவர், எரிக் வாஸ் கூறும்போது, 'பஜாஜ், 100 'சிசி' பைக் பிரிவில், பிளாட்டினா - கம்போர்டெக், சிடி - 100 ஆகிய பைக்குகள் வாயிலாக, முத்திரை பதித்துள்ளது. தற்போது அறிமுகமாகி உள்ள, 110 'சிசி' மற்றும் 125 'சிசி' பைக்குகளில், அப்பிரிவில், வேறெந்த நிறுவன பைக்குகளில் இல்லாத, சில புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன' என்றார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)