பதிவு செய்த நாள்
14 ஜன2018
01:28
ஹூண்டாய் நிறுவனம், அதன் நடுத்தர ரக, செடான் காரான, ‘வெர்னா’வில், பெட்ரோல் வேரியன்ட்டில், புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த, ‘1.4 லி., வெர்ஷனில்’ குறைந்த விலையுடைய, ‘இ’ வேரியன்ட் காரின், டில்லி ஷோரூம் விலை, 7.80 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது. அதற்கடுத்த வேரியன்ட், ‘இ எக்ஸ்’ விலை, 9.10 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.
இதுவரை தயாரிக்கப்பட்ட, 1.6 லி., பெட்ரோல் வெர்ஷனில் இருந்த, இ மற்றும் இ எக்ஸ் வேரியன்ட்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. புதிய அறிமுகமான, 1.4 லி., பெட்ரோல் வெர்ஷனின் விலை, ‘1.6 இ பெட்ரோல்’ வெர்ஷனின் விலையை விட, 20 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. விலை குறைவதால், இந்த புதிய காரின் விற்பனை சூடுபிடிக்கும் என, ஹூண்டாய் எதிர்பார்க்கிறது. 1.4 லி., பெட்ரோல் வெர்ஷன், இன்ஜின், 100 எச்.பி., திறனை உருவாக்குகிறது.
இதில், முந்தைய வெர்ஷனை விட, 8 சதவீதம் மைலேஜ் கூடுதலாக இருக்குமாம். இந்த, ‘மேனுவல்’ மாடலில், ஆறு கியர்கள் உள்ளன. ‘இ எக்ஸ்’ வேரியன்டில், கூடுதலாக, ‘ரிவர்ஸ் பார்கிங் சென்சர்ஸ், ஸ்டீரிங்கில் ஆடியோ கன்ட்ரோல்’ வசதி, 5.0 அங்குல தொடுதிரை இன்போடெயின்மென்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|