பதிவு செய்த நாள்
15 ஜன2018
01:47

இந்தியர்கள் ஆயுள் காப்பீட்டை அணுகும் விதத்தில் முக்கிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, 2016 – 17ம் ஆண்டில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மொத்த பாலிசிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும், இதே காலத்தில் பாலிசிகளுக்கான காப்பீடு தொகை மதிப்பு, 14 சதவீதம் அதிகரித்து உள்ளது.
இது காப்பீடு பெறுவதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணர்த்துவதாகவும், பாலிசிகளை வரிச்சலுகை நோக்கில் மட்டும் பார்க்காமல், பாதுகாப்பு நோக்கில் பலரும் அணுகுவதை இது உணர்த்துவதாக கருதப்படுகிறது.
பிரீமியம் வருவாயில் எல்.ஐ.சி., 12.78 சதவீத வளர்ச்சியை பெற்று உள்ளது. தனியார் நிறுவனங்கள், 17.40 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளன. இந்தியாவில், 24 ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் உட்பட மொத்தம், 62 காப்பீடு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|