பதிவு செய்த நாள்
16 ஜன2018
01:09

புதுடில்லி:உணவுப் பொருட்கள் விலை குறைவால், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 2017 டிசம்பரில், 3.58 சதவீதமாக சரிவடைந்தது. இது, நவம்பரில், 3.93 சதவீதம்; 2016 டிசம்பரில், 2.10 சதவீதமாக இருந்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், காய்கறிகள் விலை சற்று குறைந்ததால், மொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளது.நவம்பரில், 59.80 சதவீதமாக இருந்த காய்கறிகள் பணவீக்கம், டிசம்பரில், 56.46 சதவீதமாக சரிவடைந்தது. எனினும், வெங்காயம் மற்றும் பழங்கள் பணவீக்கம், முறையே, 197.05 சதவீதம் மற்றும் 11.99 சதவீதமாக அதிகரித்து உள்ளன.முட்டை, மாமிசம், மீன் ஆகியவற்றின் பணவீக்கம், 1.67 சதவீதமாக குறைந்துள்ளது.
எரிபொருள் மற்றும் மின் துறை பணவீக்கம், 9.16 சதவீதமாக உயர்ந்துள்ளது. தயாரிப்பு பொருட்கள் பணவீக்கம், 2.61 சதவீதமாக இருந்தது.டிசம்பரில், காய்கறிகள் விலையேற்றத்தால், சில்லரை பணவீக்கம், 5.21 சதவீதமாக உயர்ந்துஉள்ளது.நடப்பு நிதியாண்டில், சில்லரை பணவீக்க இலக்கு, 4.3 – 4.7 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இதற்கிடையே, மத்திய அரசு, 2017 அக்., மொத்த விலை பணவீக்கத்தை, 3.59 சதவீதத்தில் இருந்து, 3.68 சதவீதமாக மறுமதிப்பீடு செய்துள்ளது.
தேவை அதிகரிப்புரிசர்வ் வங்கி, சில்லரை பணவீக்க அடிப்படையில், வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறது.ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையால், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்ந்து,தேவை அதிகரித்துளது. இத்துடன், கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது போன்ற காரணங்களால், ரிசர்வ் வங்கி, அக்., மற்றும் டிசம்பரில் வெளியிட்ட நிதிக் கொள்கையில், ‘ரெப்போ’ வட்டியில் மாற்றம் செய்யவில்லை.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|