பங்கு சந்தைகளில் புதிய உச்சம்: ‘சென்செக்ஸ்’ 35,000ஐ கடந்ததுபங்கு சந்தைகளில் புதிய உச்சம்: ‘சென்செக்ஸ்’ 35,000ஐ கடந்தது ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 63.83 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 63.83 ...
கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; 1.20 லட்சம் நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2018
00:40

புதுடில்லி : மத்­திய அரசு, கறுப்­புப் பண ஒழிப்பு நட­வ­டிக்­கையை, மேலும் தீவி­ரப்­ப­டுத்­தும் நோக்­கில், கூடு­த­லாக, 1.20 லட்­சம், ‘லெட்­டர்­பேடு’ நிறு­வ­னங்­களின் பதிவை ரத்து செய்ய முடிவு செய்­துள்­ளது.

போலி நிறு­வ­னங்­கள் மூலம், வங்­கிக் கணக்­கில் நடை­பெ­றும், கறுப்­புப் பண பரி­வர்த்­த­னை­களை தடுக்­கும் நட­வ­டிக்­கை­களை, மத்­திய அரசு முடுக்கி விட்­டுள்­ளது. இதன்­படி, தொடர்ந்து மூன்று ஆண்­டு­கள் நிதி­நிலை அறிக்கை அளிக்­கா­ம­லும், நீண்ட காலம் செயல்­ப­டா­ம­லும் இருந்த, 2.26 லட்­சம் நிறு­வ­னங்­களின் பதிவு, ஏற்­க­னவே ரத்து செய்­யப்­பட்டு உள்­ளது. இந்­நி­று­வ­னங்­க­ளைச் சேர்ந்த, 3.09 லட்­சம் இயக்­கு­னர்­கள், தகுதி இழப்பு செய்­யப்­பட்டு உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், விதி­மீ­றல்­க­ளுக்­காக, மேலும், 1.20 லட்­சம் நிறு­வ­னங்­களை, இந்­திய நிறு­வ­னங்­கள் பதி­வா­ளர் பதி­வேட்­டில் இருந்து நீக்க, முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது.

இது குறித்து, மத்­திய கார்ப்­ப­ரேட் விவ­கா­ரங்­கள் அமைச்­ச­கம் வெளி­யிட்­டு உள்ள அறிக்கை: கடந்த, 2017 டிச., வரை, 2.26 லட்­சம் நிறு­வ­னங்­களின் பதிவு ரத்து செய்­யப்­பட்டு உள்­ளது. இவற்­றில், 1,157 நிறு­வ­னங்­கள், தேசிய நிறு­வன சட்ட தீர்ப்­பா­யத்தை அணுகி உள்ளன. அதில், 180 நிறு­வ­னங்­களின் பதிவை புதுப்­பிக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது. இவற்­றில், விதி­மு­றைப்­படி விப­ரங்­கள் வழங்­கிய, 128 நிறு­வ­னங்­களின் பதிவு புதுப்­பிக்­கப்­பட்டு உள்­ளது.

நிறு­வன இயக்­கு­னர்­களின் தகு­தி­யி­ழப்பை எதிர்த்து, 992 வழக்­கு­கள் தாக்­க­லாகி உள்ளன. அவற்­றில், 190 வழக்­கு­கள் தள்­ளு­படி செய்­யப்­பட்டு உள்ளன. இந்த நட­வ­டிக்­கை­யில், தகுதி உள்ள நிறு­வ­னங்­கள் பாதிக்­கக் கூடாது என்ற நோக்­கத்­தில், ‘தாமத கணக்கு தாக்­கல் மன்­னிப்பு’ திட்­டம் அறி­விக்­கப்­பட்­டது. இதன்­படி, பதிவு ரத்­தான நிறு­வ­னங்­கள், மார்ச், 31க்குள், நிதி­நிலை அறிக்­கையை தாக்­கல் செய்­ய­லாம்.

அர­சின் நட­வ­டிக்­கை­யால், அதிக அள­வி­லான நிறு­வ­னங்­கள், வரவு – செலவு விப­ரங்­களை, எம்.சி.ஏ., 21 வலை­த­ளத்­தில் தாக்­கல் செய்­கின்றன. வலை­த­ளத்­தில், கணக்கு விப­ரங்­களை குறித்த காலத்­தில் தாக்­கல் செய்து, வழக்­கு­களை தவிர்க்­கு­மாறு, அனைத்து நிறு­வ­னங்­களின் செய­லர்­கள் மற்­றும் இயக்­கு­னர்­க­ளுக்கு தக­வல் அனுப்­பப்­ப­டு­கிறது. அர­சின் இந்த நட­வ­டிக்கை, நிறு­வ­னங்­கள் சிறப்­பான நிர்­வாக நடை­மு­றை­களை கடை­பி­டிக்­க­வும், அவற்­றின் மீதான முத­லீட்­டா­ளர்­களின் நம்­ப­கத்­தன்மை அதி­க­ரிக்­க­வும் உத­வும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

ஏமாற கூடாது:
கறுப்­புப் பண ஒழிப்பு மட்­டு­மின்றி, நேர்­மை­யற்ற மனி­தர்­கள், கார்ப்­ப­ரேட் நிர்­வாக நடை­மு­றை­களை பயன்­ப­டுத்தி, அப்­பாவி முத­லீட்­டா­ளர்­களை ஏமாற்­றக் கூடாது என்­ப­தும், அர­சின் நோக்­க­மா­கும். புதிய இந்­தி­யா­வின் மிகச் சிறப்­பான பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு, நிறு­வ­னங்­களின் வெளிப்­ப­டை­யான, ஒளி­வு­ம­றை­வற்ற நிர்­வாக செயல்­பா­டு­கள், அடித்­த­ளம் அமைத்­துக் கொடுக்­கும்.
-பி.பி.சவுத்ரி, மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் துறை இணை அமைச்சர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)