22,834 கார்களை திரும்ப பெறுகிறது ஹோண்டா22,834 கார்களை திரும்ப பெறுகிறது ஹோண்டா ... கடையாணி கடையாணி ...
மத்திய அரசின் மின் வாகன கொள்கையால் 15 லட்சம் பேர் வேலையிழக்க நேரிடும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2018
00:34

புதுடில்லி : ‘மத்­திய அரசு, 2030ல், நாடு முழு­வ­தும், பொது போக்­கு­வ­ரத்­தில், மின் வாக­னங்­களை பயன்­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்­ள­தால், வாகன உதிரி பாகங்­கள் துறை­யில், 15 லட்­சம் பேர் வேலை­யி­ழக்க நேரி­டும்’ என, இந்­திய வாகன உதிரி பாகங்­கள் தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பான, ‘அக்மா’ தெரி­வித்து உள்­ளது.

மத்­திய அரசு, சுற்­றுச்­சூ­ழல் மாசு­பாட்டை குறைக்­கும் நோக்­கில், 2030ல், நாடு முழு­வ­தும், பொது போக்­கு­வ­ரத்­தில், மின் வாக­னங்­களை பயன்­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்­ளது. இதற்­காக, மின் வாகன தயா­ரிப்­பில் விரைந்து இறங்­கு­மாறு, வாகன நிறு­வ­னங்­கள் அறி­வு­றுத்­தப்­பட்டு உள்ளன. இதை­யேற்று, மாருதி சுசூகி, டாடா மோட்­டார்ஸ் உள்­ளிட்ட முன்­னணி நிறு­வ­னங்­கள், மின் வாகன தயா­ரிப்­பில் கள­மி­றங்கி உள்ளன.

இந்­நி­லை­யில், மத்­திய அர­சின் கொள்­கை­களை வகுக்­கும், ‘நிடி ஆயோக்’ அமைப்­பிற்கு, ‘அக்மா’ எழு­தி­யுள்ள கடி­தம்: போதிய அவ­கா­ச­மின்றி, 13 ஆண்­டு­களில், மின் வாகன பயன்­பாட்டை கட்­டா­யம் ஆக்­கி­னால், அந்த தொழில்­நுட்­பத்­தில், உதிரி பாகங்­களை தயா­ரிப்­ப­தற்­கான கட்­ட­மைப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்தி, தேவை­யான முத­லீ­டு­களை மேற்­கொள்­வது கடி­ன­மாக இருக்­கும். ஏற்­க­னவே, வாகன மாசு கட்­டுப்­பாடு தொடர்­பாக, 2020ல் அம­லுக்கு வர உள்ள, ‘பாரத் ஸ்டேஜ் – 4’ தொழில்­நுட்­பத்­தில், வாகன உதிரி பாகங்­கள் தயா­ரிப்­ப­தற்கு, பெரு­ம­ள­வில் முத­லீடு செய்­யப்­பட்டு உள்­ளது. இந்த முத­லீ­டு­கள் மீது, நியா­ய­மான வரு­வாய் கிடைக்க, குறைந்­த­பட்­சம், 10 ஆண்­டு­க­ளா­வது ஆகும்.

இந்­நி­லை­யில், பெரு­ம­ளவு முத­லீடு தேவைப்­படும், மின் வாகன உதிரி பாகங்­களின் தயா­ரிப்­பி­லும் இறங்க, நிறு­வ­னங்­க­ளால் இய­லாது. அத­னால், மின் வாகன கொள்­கையை, படிப்­ப­டி­யாக அமல்­ப­டுத்­த­லாம். இத­னால், புதிய தொழில்­நுட்­பத்­திற்கு மாறும் போது ஏற்­படும் வேலை­யி­ழப்பு பாதிப்பு, மிகக் குறை­வாக இருக்­கும்.

‘வரும், 2030ல், 40 சத­வீத வாக­னங்­களை, மின்­சா­ரத்­திற்கு மாற்­ற­லாம்’ என, வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் தெரி­வித்து உள்ளன. இது­வும், வாகன உதிரி பாக நிறு­வ­னங்­களை பாதிக்­கும். ஏனெ­னில், மின் வாக­னங்­க­ளுக்­கான பெரும்­பா­லான முக்­கிய பாகங்­கள், வெளி­நாட்­டில் இருந்து தான் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்றன.

நடுத்­தர காலத்­தில், மின் வாக­னங்­க­ளுக்­கான, ‘பேட்­டரி’ தேவை குறை­வா­கவே இருக்­கும் என்­ப­தால், அவற்­றின் தயா­ரிப்­பில் இறங்­கும் நிறு­வ­னங்­க­ளால், முத­லீட்­டிற்கு ஏற்ற வரு­வாய் ஈட்ட முடி­யாது. அத­னால், மின் வாகன அம­லாக்­கத்தை தள்ளி வைக்க வேண்­டும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

முதலீடு குறையும்:
உட­ன­டி­யாக, மின் வாகன புழக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது சரி­யாக இருக்­காது. அதற்கு, 20 – 30 ஆண்­டு­கள் அவ­கா­சம் தேவை. முத­லில், எரி­பொ­ரு­ளில் இருந்து மின் வாக­னங்­க­ளுக்கு மாறு­வ­தற்­கான சூழலை ஏற்­ப­டுத்த வேண்­டும். இத­னால், ஒரு பகுதி தொழி­லா­ளர்­கள், புதிய தொழில்­நுட்­பத்­திற்கு சுல­ப­மாக மாறு­வர். அடுத்த, 10 ஆண்­டு­களில், எரி­பொ­ருள் இன்­ஜின் தயா­ரிப்­பில், முத­லீடு வெகு­வாக குறைந்து விடும்.
-குமார் கந்தஸ்வாமி, பங்குதாரர், ‘டிலோட்டி இந்தியா’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)