மத்திய அரசின் மின் வாகன கொள்கையால் 15 லட்சம் பேர் வேலையிழக்க நேரிடும்மத்திய அரசின் மின் வாகன கொள்கையால் 15 லட்சம் பேர் வேலையிழக்க நேரிடும் ... அருண் ஜெட்லி அல்வா கிளறி  பட்ஜெட் அச்சடிப்பை துவக்கினார் அருண் ஜெட்லி அல்வா கிளறி பட்ஜெட் அச்சடிப்பை துவக்கினார் ...
கடையாணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2018
04:34

பென்ஸ்இந்­தி­யா­வில் தயா­ரான முதல் கார்மெர்­சிெ­டஸ் பென்ஸ் நிறு­வ­னம், இந்­திய ஆலை­களில் உரு­வான, முதல், பி.எஸ்., 6 காரை அறி­மு­கம் செய்­துள்­ளது. இந்­தி­யா­வில், சுற்­றுச்­சூ­ழல் மாசை குறைப்­ப­தற்­காக, பி.எஸ்., 4 எனும் விதி­மு­றை­க­ளுக்கு ஏற்ற, புகை குறை­வாக வெளி­யி­டும் வாக­னங்­களை தயா­ரிப்­பது, கட்­டா­ய­மாக்­கப்­பட்டு உள்­ளது. மேலும், 2020 முதல், அதை விட தரம் உயர்­வான, பி.எஸ்., 6 விதி­மு­றை­க­ளுக்கு கட்­டுப்­பட்டு வாக­னங்­களை உரு­வாக்க, இந்­திய அரசு கெடு விதித்­துள்­ளது.ஆனால், மெர்­சி­டெஸ் பென்ஸ் நிறு­வ­னம், ஒரு­படி மேலே போய், இரு ஆண்­டு­க­ளுக்கு முன்­பா­கவே, உள்­நாட்­டில், பி.எஸ்., 6 விதி­க­ளுக்கு உட்­பட்ட, ‘எஸ் கிளாஸ்’ காரை, புனே­வில் உள்ள அதன் ஆலை­யில் தயா­ரித்­துள்­ளது. அதன் அறி­முக நிகழ்ச்­சி­யில், மத்­திய சாலை போக்­கு­வ­ரத்து துறை அமைச்­சர், நிதின் கட்­கரி பங்­கேற்று பாராட்டி உள்­ளார். நம் நாட்­டில், பி.எஸ்., 4 எரி­பொ­ருள் மட்­டுமே, தற்­போது பெட்­ரோல் நிலை­யங்­களில் கிடைக்­கிறது. அதை கொண்டே, இந்த காரை இயக்க முடி­யும் என, அந்­நி­று­வ­னம் கூறி­யுள்­ளது.

யமஹா
முதல் 125 ‘சிசி’ ஸ்கூட்­டர்யமஹா மோட்­டார்ஸ் நிறு­வ­னம், அதன் முதல், 125 ‘சிசி’ ஸ்கூட்­டரை தயா­ரித்து உள்­ளது. இதை, அடுத்த மாதம் அறி­மு­கப்­ப­டுத்த பரி­சீ­லித்து வரு­கிறது. இந்த புதிய ஸ்கூட்­டர் குறித்த விப­ரங்­களை வெளி­யி­டா­மல் அமைதி காக்­கும் யமஹா, டில்லி வாகன கண்­காட்­சி­யில் காட்­சிப்­ப­டுத்­தும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.‘நோசா கிராண்டு’ என, பெய­ரி­டப்­பட்­டுள்ள இந்த ஸ்கூட்­டர், அறி­மு­கம் செய்­யப்­பட்­டால், இந்­தி­யா­வில் யம­ஹா­வின் முதல், 125 ‘சிசி’ ஸ்கூட்­ட­ராக இருக்­கும். பார்ப்­ப­தற்கு, ‘ஸ்டை­லாக’ காட்சி தரும் இந்த ஸ்கூட்­ட­ரில், சீட்­டின் கீழ்­ப­கு­தி­யில், 27 லி., கொள்­ள­ளவு கொண்ட பொருட்­களை வைப்­ப­தற்­கான விசா­ல­மான இட வசதி உள்­ளது. அதில், ‘ஹெல்­மெட்’டை தாரா­ள­மாக வைக்­க­லாம் என்­பது, ஸ்கூட்­டர் பிரி­யர்­க­ளுக்கு மகிழ்ச்­சி­யூட்­டும் தக­வல். டில்லி ஷோரூ­மில் துவக்க விலை, 60 ஆயி­ரம் – 65 ஆயி­ரம் ரூபாய் வரை இருக்­க­லாம் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்த ஸ்கூட்­டர், ‘ஹோண்டா கிரா­சியா, ஆக்­டிவா 125, சுசூகி ஆக்­சஸ் 125’ மற்­றும், ‘டி.வி.எஸ்., கிரா­பைட்’ ஆகி­ய­வற்­றுக்கு போட்­டி­யாக விளங்­கும்.
பஜாஜ்
விலை வெளி­யா­னதுபஜாஜ் நிறு­வ­னத்­தின் தயா­ரிப்­பு­களில், பிர­ப­ல­மாக விளங்­கும் பைக்­கு­களில் ஒன்­றான, ‘அவெஞ்­சர்’ சில மாற்­றங்­க­ளு­டன் அறி­மு­க­மாகி உள்­ளது.இந்­தி­யா­வில் தயா­ரான முதல், ‘க்ரூ­ஸர்’ ரக பைக்­கான அவெஞ்­சர், போட்­டி­யா­ளர்­க­ளுக்கு இடம் தரா­மல், முத­லி­டத்தை தக்க வைத்­துள்­ளது. அவெஞ்­சர் பைக்­கு­களில், 220 ‘சிசி’ தான், அதிக வர­வேற்பை பெற்­றுள்­ளது. இது, ‘ஸ்ட்­ரீட், க்ரூ­ஸர்’ ஆகிய வேரி­யன்ட்­களில் விற்­கப்­ப­டு­கிறது. அத­னால், அந்த பைக்­கில் மட்­டும் சில மாற்­றங்­களை செய்து, 2018ல், பஜாஜ் நிறு­வ­னம் கள­மி­றக்கி உள்­ளது. இதில், இரு வேரி­யன்ட்­க­ளி­லும், பல புதிய அம்­சங்­கள் கூடு­த­லாக சேர்க்­கப்­பட்டு உள்ளன.குறிப்­பாக, எல்.இ.டி., முகப்பு விளக்கு, ‘டிஜிட்­டல் இன்ஸ்ட்­ரு­மென்ட் பாட்’ ஆகிய சில அம்­சங்­களை கூற­லாம். இரு வேரி­யன்ட்­க­ளி­லும், ‘மூன் ஒயிட்’ எனும், புதிய வண்­ணப்­பூச்சு கண்ணை கவ­ரும் வகை­யில் உள்­ளது. மேலும், நீண்ட துார பய­ணங்­க­ளுக்கு ஏற்ப, இரு வேரி­யன்ட்­க­ளி­லும் இருக்­கை­கள் சிறிது மாற்றி அமைக்­கப்­பட்டு உள்ளன. இவற்­றின் விலை, டில்லி ஷோரூ­மில், 93,466 ரூபா­யில் இருந்து துவங்­கு­கிறது.
வாகன திரு­விழா
பிப்., 9 – 14 வரை கோலா­க­லம்இந்­தி­யா­வில், வாகன உற்­பத்­தி­யா­ளர்­கள், விற்­பனை துறை சார்ந்­த­வர்­கள் மற்­றும் வாகன பிரி­யர்­கள், மிக ஆர்­வ­மாக எதிர்­பார்க்­கும், ‘தி மோட்­டார் ஷோ’ எனப்­படும், சர்­வ­தேச வாகன திரு­விழா நடை­பெ­றும் நாள் நெருங்கி விட்­டது.டில்­லி­யில், இரு ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை நடக்­கும் இந்த வாகன கண்­காட்சி, வழக்­கம் போல், கிரேட்­டர் நொய்­டா­வில் உள்ள, ‘இந்­தியா எக்ஸ்போ மார்ட்’ திட­லில், பிப்., 9 – 14 வரை நடக்­கிறது.இதில், இந்­தியா மற்­றும் சர்­வ­தேச வாகன உற்­பத்தி நிறு­வ­னங்­கள், புதிய வாக­னங்­களை அறி­மு­கப்­ப­டுத்த உள்ளன. இதற்­கா­கவே, பல நிறு­வ­னங்­கள் புது அறி­மு­கங்­களை ரக­சி­ய­மாக வைத்­துள்ளன. சில நிறு­வ­னங்­கள், ஆவலை துாண்டும் வித­மாக, அடுத்த தயா­ரிப்­பு­கள் குறித்த முன்­னோட்­டங்­களை வெளி­யிட்டு, அதன் மாதிரி வாக­னங்­களை காட்­சிக்கு வைக்­கும். இதை, ‘சியாம்’ எனப்­படும், இந்­திய வாகன உற்­பத்­தி­யா­ளர்­கள் அமைப்பு, இந்­திய தொழில் கூட்­ட­மைப்பு மற்­றும் ஆட்டோ உதிரி பாக ஆலை கூட்­ட­மைப்­பி­னர் இணைந்து நடத்­து­கின்­ற­னர். இம்­மா­நாடு குறித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பை, சில தினங்­க­ளுக்கு முன், ‘சியாம்’ கண்­காட்­சி­கள் பிரிவு தலை­வர், அருண் மல்­ஹோத்ரா அறி­வித்­தார்.

‘கியா’ விரை­வில் காட்­சிக்கு வரு­கிறதுதமி­ழ­கத்­திற்கு வர­வி­ருந்த, ‘ஹூண்­டாய்’ கார் நிறு­வ­னத்­தின் துணை நிறு­வ­ன­மான, ‘கியா மோட்­டார்ஸ்’ நிறு­வ­னம், ஆந்­தி­ரா­வில் ஆலை துவங்­கு­வ­தற்­கான பணி­களில் ஈடு­பட்­டுள்­ளது. முன்­ன­தாக, அதன் கார்­களை, இந்­திய கார் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு காட்­சிப்­ப­டுத்தி, எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்த உள்­ளது.இதற்கு, பிப்­ர­வ­ரி­யில், டில்­லி­யில் துவங்­கும் வாகன கண்­காட்­சியை பயன்­ப­டுத்­திக் கொள்ள திட்­ட­மிட்டு உள்­ளது. அங்கே, பல­வி­த­மான கியா கார்­களை காட்­சிப்­ப­டுத்த உள்­ளது.எனி­னும், அடுத்த ஆண்டு முதல், இந்­தி­யா­வில் உற்­பத்தி செய்­யப்­படும் எனக் கரு­தப்­படும், எஸ்.யு.வி.,யின் மீது தான், அனை­வ­ரது கவ­ன­மும் குவிந்­தி­ருக்­கிறது. ‘ஹூண்­டாய்’ தயா­ரிப்­பான, ‘கிரெட்டா’வை விட, இந்த, எஸ்.யு.வி., அள­வில் சிறிது பெரி­தாக இருக்­கு­மாம். இதற்கு, இன்­னும் பெய­ரி­டப்­ப­ட­வில்லை. ஆனால், இந்­தி­யா­வில் தயா­ரிக்க உள்ள, சிறிய ரக, ‘செடான்’ காரை, கண்­காட்­சி­யில் காட்­சிப்­ப­டுத்­தா­மல், ரக­சி­ய­மாக வைக்க திட்­ட­மிட்­டுள்­ளது, கியா.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)