'டிஜிட்டல்' கட்டமைப்பை மேம்படுத்தினால் பொருளாதார வளர்ச்சி 3 மடங்கு அதிகரிக்கும்'டிஜிட்டல்' கட்டமைப்பை மேம்படுத்தினால் பொருளாதார வளர்ச்சி 3 மடங்கு ... ... கடன், டிபா­சிட்­க­ளுக்­கான  வட்டி விகிதம் மாறு­வது ஏன்? கடன், டிபா­சிட்­க­ளுக்­கான வட்டி விகிதம் மாறு­வது ஏன்? ...
கடன், டிபா­சிட்­க­ளுக்­கான வட்டி விகிதம் மாறு­வது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2018
05:10

வட்டி விகித போக்கு சேமிப்பு, முத­லீட்டின் பலன் மீது தாக்கம் செலுத்­து­வதால், இதற்­கான அடிப்­படை கார­ணங்­களை அறிந்து கொள்­வது நிதி திட்­ட­மி­டலில் உதவும்.
கடந்த ஓராண்டில் சிறு சேமிப்பு திட்­டங்­க­ளுக்­கான வட்டி விகிதம் குறைந்­துள்­ளது. வங்­கிகள் டிபா­சிட்­க­ளுக்­கான வட்டி விகி­தத்­தையும் குறைத்­துள்­ளன. இதன் கார­ண­மாக மாத வரு­மானம் மற்றும் நீண்ட கால முத­லீட்­டிற்கு இந்த நிதி சாத­னங்­களை நாடு­ப­வர்­க­ளுக்கு ஓர­ளவு பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. வட்டி விகிதம் குறையும் போக்கு கார­ண­மாக முத­லீட்டு உத்­தியில் மாற்றம் தேவையா என, பரி­சீ­லிக்க வேண்­டிய அவ­சியம் இருக்­கி­றது. அதற்கு முன், கடன் மற்றும் டிபா­சிட்­க­ளுக்­கான வட்டி விகி­தத்தில் மாற்றம் ஏற்­ப­டு­வ­தற்­கான அடிப்­படை கார­ணங்­களை புரிந்து கொள்­வது பய­னுள்­ள­தாக இருக்கும். ரெப்போ விகிதம்வட்டி விகிதம் குறை­வது அல்­லது உயர்­வதில் ரெப்போ விகிதம் முக்­கிய பங்கு வகிக்­கிறது. வங்­கி­க­ளுக்கு வழங்­கிய பத்­தி­ரங்­களை நிர்­ண­யிக்­கப்­பட்ட விகி­தத்தில் ரிசர்வ் வங்கி மீண்டும் வாங்கி கொள்­வது ரெப்போ பரி­வர்த்­தனை எனப்­ப­டு­கி­றது. இந்த பரி­வர்த்­தனை ரெப்போ விகிதம் அடிப்­ப­டையில் அமை­கி­றது. வங்­கிகள் ரிசர்வ் வங்­கி­யிடம் இருந்து கடன் பெறும் விகிதம் என்றும் இதை புரிந்து கொள்­ளலாம். பொரு­ளா­தா­ரத்தில் பெரும்­பாலான நிதி பரி­வர்த்­த­னைகள் வங்­கி­களை மைய­மாக கொண்டு நடப்­பதால் ரெப்போ விகித மாற்றம் வட்டி விகி­தத்தை பாதிக்­கி­றது.ரெப்போ விகிதம் அதி­க­மாக இருந்தால் வங்­கிகள் ரிசர்வ் வங்­கி­யிடம் இருந்து அதிக விகி­தத்தில் கடன் வாங்­கு­கின்­றன என பொருள். இதன் கார­ண­மாக வங்­கிகள் வழங்கும் கட­னுக்­கான வட்டி விகி­தமும் அதி­க­ரிக்­கி­றது. இதற்­கேற்ப டிபா­சிட்­க­ளுக்­கான வட்­டியும் உயர்­கி­றது. அதே போல, அர­சும் பி.பி.எப்., கிசான் விகாஸ் பத்­திரம் உள்­ளிட்ட சிறு­சே­மிப்பு திட்­டங்கள் மூலம் பொது­மக்­க­ளிடம் இருந்து டிபாசிட் பெறு­கி­றது. ரெப்போ விகிதம் உள்­ளிட்ட வழி­களில் இருந்து கிடைக்கும் வரு­மானம் கொண்டே அரசு இதற்­கான வட்­டியை அளிக்­கி­றது. (வங்­கிகள் ரெப்போ விகி­தத்­திற்கு ஏற்ப அர­சுக்கு வட்டி அளிக்­கின்­றன). இந்த விகிதம் குறை­வது அரசின் வட்டி அளிக்கும் ஆற்றல் மீது தாக்கம் செலுத்­து­கி­றது. எனவே ரெப்போ விகிதம் குறையும் சூழலில் வட்­டியும் குறை­கி­றது.நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் பண புழக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­களில் ஒன்­றாக ரெப்போ விகி­தத்தை ரிசர்வ் வங்கி பயன்­ப­டுத்­து­கி­றது. வங்­கி­களின் வட்டி விகிதம் வர்த்­தக நிறு­வன முத­லீடு மற்றும் தனி­நபர் சேமிப்பு மீது தாக்கம் செலுத்­து­வதால், இவற்றில் ஏற்­படும் மாற்­றங்கள் பொரு­ளா­தார வளர்ச்­சி­யிலும் தாக்கம் செலுத்தும். இவை பரஸ்­பரம் தொடர்பு கொண்­டவை. பண­வீக்கம்பொருட்கள் மற்றும் சேவை­களை பெறு­வ­தற்­கான விலையில் ஏற்­படும் மாற்­றத்தின் விகி­தமே பண­வீக்­க­மாக அமை­கி­றது. பண­வீக்க விகிதம் அதி­க­மாக இருக்கும் போது பணத்தின் மதிப்பு குறை­கி­றது. அப்­போது அதிக வட்டி விகிதம் ஈடுசெய்­கி­றது. பண­வீக்க விகிதம் குறை­வாக இருக்கும் போது பணத்தின் மதிப்பு பாது­காக்­கப்­ப­டு­கி­றது. இதனால் அதிக தாக்கம் ஏற்­ப­டு­வ­தில்லை. வட்டி விகி­தத்தில் இருந்து பண­வீக்­கத்தை கழிப்­ப­தையே உண்­மை­யான பலன் விகி­த­மாக கொள்ள வேண்டும். பொது­வாக பொரு­ளா­தார மந்­த­நிலை சூழலில் அர­சுக்­கான வரு­மானம் குறையும் வாய்ப்பு இருப்­பதால், இதன் கார­ண­மா­கவும் சிறு சேமிப்பு திட்­டங்­க­ளுக்­கான வட்டி விகிதம் குறை­யலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)