பதிவு செய்த நாள்
22 ஜன2018
05:18
நாட்டில் அமைப்பு சார்ந்த துறைகளில் இந்த நிதியாண்டில் ஏழு மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.எஸ்.பி.ஐ., குழும முதன்மை பொருளாதார ஆலோசகர் சவுமியா காந்தி கோஷ் மற்றும் பொருளாதார பேராசிரியர், புலாக் கோஷ் ஆகியோர், அமைப்பு சார்ந்த துறையில் வேலைவாய்ப்பு தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். பி.எப்., காப்பீடு, பென்ஷன் திட்டங்களில் இணையும் உறுப்பினர்கள் ஆகிய புள்ளி விபரங்களை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.இத்தகைய புள்ளி விபரங்கள் அடிப்படையில் நடத்தப்படும் முதல் ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியாண்டில் நவம்பர் மாதம் வரை, அமைப்பு சார்ந்த துறைகளில் ஒவ்வொரு மாதமும், 5 லட்சத்து, 90 ஆயிரம் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த போக்கு தொடர்ந்தால் நிதிஆண்டில் ஏழு மில்லியன் வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|