கடன், டிபா­சிட்­க­ளுக்­கான  வட்டி விகிதம் மாறு­வது ஏன்?கடன், டிபா­சிட்­க­ளுக்­கான வட்டி விகிதம் மாறு­வது ஏன்? ... நேரத்தையும் முதலீடு செய்யுங்கள் நேரத்தையும் முதலீடு செய்யுங்கள் ...
பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2018
05:20


தேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டான, நிப்டி தொடர்ந்து ஏழா­வது வார­மாக உயர்வை சந்­தித்­தது. கடந்த வாரம் உயர்ந்து, புதிய வர­லாற்று உச்­ச­மான, 10,900 புள்­ளி­களை கடந்­தது. கடந்த ஆண்டு ஜன­வரி மாத ஆரம்­பத்­தில், 8,210 புள்­ளி­க­ளு­டன் துவங்­கிய குறு­கிய கால உயர்வு, தற்­போது தொடர்ந்து நீடிக்­கிறது. இருப்­பி­னும், மிட்­கேப் மற்­றும் ஸ்மால்­கேப் பங்­கு­களின் விலை­யில் சரிவு காணப்­ப­டு­கிறது.கடந்த காலங்­களில் உயர்வு பெறாத தொழில்­நுட்­பம் மற்­றும் வங்கி பங்­கு­கள், தற்­போது நல்ல விலை உயர்­வை சந்­தித்து வரு­கின்றன. மேலும், இந்த ஆண்­டில், தொழில்­நுட்­பத் ­துறை வளர்ச்சி பெறும் என்ற எதிர்­பார்ப்­பும் உள்­ளது.தனி­யார் மற்­றும் பொதுத்­துறை வங்­கி­களில், அன்­னிய நேரடி முத­லீட்டு வரம்பை, ரிசர்வ் வங்கி உயர்த்­தும் என்ற எதிர்­பார்ப்­பின் அடிப்­ப­டை­யில், வங்கி பங்­கு­கள் உயர்ந்த வண்­ணம் உள்ளன.நடப்பு நிதி­யாண்­டின் மூன்­றாம் காலாண்டு நிதி­நிலை அறிக்­கை­க­ளைப் பொறுத்­த­வரை, பல முன்­னணி நிறு­வ­னங்­களின் அறி­விப்­பு­கள் இந்த வாரம் வர­வி­ருக்­கின்றன. இதில், ஆக்­சிஸ் பேங்க், கனரா பேங்க், எல்.ஐ.சி., மற்­றும் பி.என்.பி. ஹவு­சிங் பைனான்ஸ், விகார்டு, ஹேவல்ஸ் போன்ற நிறு­வ­னங்­களும் அடங்கும். வியா­ழன் அன்று எப் அண்டு ஓ செட்­டில்­மென்ட் நாள். வெள்­ளி­யன்று பங்­குச் சந்­தை­க­ளுக்கு விடு­முறை ஆகும்.இந்த வாரம் பல முக்­கிய நிகழ்­வு­களும் இடம்­பெற இருக்­கின்றன. அதில் குறிப்­பி­டத்­தக்­கது, 17 ஆண்­டு­க­ளுக்கு பிறகு அமெ­ரிக்க அதி­ப­ரும், 20 ஆண்­டு­க­ளுக்கு பிறகு இந்திய பிர­த­ம­ரும், உலக பொரு­ளா­தார கூட்­டத்­தில் பங்­கேற்க உள்­ள­னர்.ஐரோப்­பிய மத்­திய வங்கி, பேங்க் ஆப் ஜப்­பான் போன்­ற­வற்­றின் வட்டி விகி­தம் குறித்த நிதிக் கொள்கை கூட்­டம் இந்த வாரத்­தில் நடை­பெற உள்­ளது. இவற்­றில் ஏற்­படும் மாற்றங்­கள் சந்­தை­யில் தாக்­கத்தை உண்­டாக்­கும்.அமெ­ரிக்க பங்­குச் சந்­தை­யில், டவ் ஜோன்ஸ், 26 ஆயிரம் புள்­ளி­களை கடந்­தது. இதை பின்­பற்றி, நிப்­டி­யும் மத்­திய பட்­ஜெட்­டுக்கு முன்­பாக, 11 ஆயிரம் புள்­ளி­களை கடக்­கும் என்ற எதிர்­பார்ப்­பும் உள்­ளது.அமெ­ரிக்க சபை­யில், குறு­கி­ய­கால செல­வின பில் நிறை­வேற்­றப்­ப­டா­மல் அர­சு முடக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதற்கு முன்­பாக, 2013 மற்­றும் 1995ம் ஆண்­டு­களில் அமெ­ரிக்க அரசு சில நாட்­க­ளுக்கு முற்­றி­லும் மூடப்­பட்­டி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. நிப்­டியை பொறுத்­த­வரை ரெசிஸ்­டென்ஸ், 11,143 மற்­றும் சப்­போர்ட், 10,710 ஆகும்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்­ணெய் விலை, கடந்த வாரம் சிறிய சரி­வில் முடி­வ­டைந்­தது. நான்கு வார தொடர் உயர்­வுக்கு பிறகு எண்­ணெய் விலை­யா­னது, மூன்று ஆண்டு உச்ச விலை­யான, ஒரு பேரல், 65 அமெ­ரிக்க டாலர் என்­பதை எட்­டி­யது. இருப்­பி­னும், பெரு­கி­ வ­ரும் அமெ­ரிக்க எண்­ணெய் உற்­பத்­தியை கண்டு, முத­லீட்­டா­ளர்­கள் மற்­றும் வியா­பா­ரி­கள் பொருள் வாணிப சந்­தை­யில் தங்­க­ளது கொள்­மு­தலை விற்­பனை செய்­த­னர். இத­னால் கடந்த வெள்­ளி­யன்று ஒரு சத­வீத விலை சரிவு நேர்ந்­தது.இ.ஐ.ஏ., அமைப்பு, அமெ­ரிக்க தின­சரி உற்­பத்தி கடந்த வாரம், 9.75 மில்­லி­யன் பேரல்­கள் உயர்ந்­த­தாக தக­வல் வெளி­யிட்­டது. மேலும், 747 ஆழ்­கு­ழாய் எண்­ணெய் கிண­று­கள் இயங்கி வரு­கின்றன. எனி­னும், இந்த விலை சரிவு தற்­கா­லி­க­மாக இருக்­கும் என கரு­தப்­ப­டு­கிறது.எண்­ணெய் விலை­யைப் பொறுத்­த­வரை, 2016 மற்­றும் 2017ம் ஆண்­டு­கள் விலை­யேற்­றம் கண்ட ஆண்­டு­க­ளா­கும். இதற்கு முந்­தைய இரு ஆண்­டு­களின் சரி­வுக்­குப் பிறகு மீண்­டும் விலை உயர்ந்­தது.கடந்த, 2016 ஜன­வரி மாதம், ஒரு பேரல், 26.19 டாலர் என்­ப­தில் இருந்து கணி­ச­மாக உயர்ந்து, தற்­போது ஒரு பேரல், 65 டாலர் என்ற விலையை எட்­டி­யுள்­ளது. இதற்கு முக்­கி­ய­மான கார­ணம், ஒபெக் மற்­றும் ஒபெக் அமைப்­பில் இல்­லாத நாடு­கள் ஒருங்­கி­ணைந்து, தின­சரி 1.8 மில்­லி­யன் பேரல்­கள் என்ற அள­வுக்கு உற்­பத்தி குறைப்பு நட­வ­டிக்­கையை மேற்­கொண்­ட­து­ தான். உற்­பத்தி குறைப்பு மீண்­டும் ஓர் ஆண்­டுக்குஅதா­வது, டிசம்­பர் 2018 வரை நீட்­டிக்க பின்­ முடிவு செய்­யப்­பட்­டது. இதை உல­கின் மிகப்­பெ­ரிய எண்­ணெய் உற்­பத்தி நாடு­க­ளான சவுதி மற்­றும் ரஷ்யா ஆத­ரித்­த­தன் கார­ண­மாக, விலை­யேற்­றம் அடைந்­தது.வரும் நாட்­களில் விலை, 65 டாலரை கடக்க இய­லாத நிலை­யில், சிறிய இறக்­கத்தை காண நேர­லாம். இந்த அளவை கடந்­தால் மட்­டுமே, மீண்­டும் கச்சா எண்­ணெய் விலை உயர்வு அடை­யும்.
தங்கம், வெள்ளி
தங்­கம் மற்­றும் வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை, கடந்த டிசம்­பர் மாதம் இரண்­டாம் வாரம் முதல் தொடர்ந்து நான்கு வாரங்­கள் அதி­க­ரித்து, ஒரு அவுன்ஸ் தங்­கம், 1,344 டாலர் என்­பதை எட்­டி­யது. ஒரு அவுன்ஸ் என்­பது 31.104 கிராம் ஆகும். அமெ­ரிக்க நாணய குறி­யீ­டான, டாலர் இன்­டெக்ஸ் வீழ்ச்சி மற்­றும் அரசு கரு­வூ­லங்­களின் ஆதா­யம் குறைவு மற்­றும் அமெ­ரிக்க பத்­தி­ரங்­களில் சீனா­வின் முத­லீடு குறைவு ஆகி­யவை கார­ண­மாக, தங்­கம் மீது முத­லீட்­டா­ளர்­கள் ஆர்­வம் அதி­க­ரித்­தது. அமெ­ரிக்க பத்­தி­ரங்­களில் அதி­க­ள­வில் முத­லீடு செய்­யும் நாடு சீனா­வா­கும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.இருப்­பி­னும், தொடர் உயர்­வுக்கு பிறகு கடந்த வாரம் வியா­பா­ரி­கள் மேற்­கொண்ட லாபம் எடுத்­தல் கார­ண­மாக விலை சரிந்து வர்த்­த­க­மா­கி­யது.பொருள் வாணிப சந்­தை­யில், தங்­கம் முத­லீட்டை காட்­டி­லும், ஈ.டி.எப்., எனப்­படும் முத­லீடு, கடந்த 2013ம் ஆண்­டின் உச்­சத்தை எட்­டி­யது. அமெ­ரிக்­கா­வின் எஸ்.பி.டி.ஆர். தங்க பங்­கு­கள் முத­லீடு, 2,300 டன்னை எட்­டி­யது. மேலும் தற்­போது விரைந்து உயர்ந்து வரும், பிட்­கா­யின் விலை சரி­வும், கடந்த வாரங்­களில் தங்­கம் விலை உயர ஒரு கார­ணம் என்று கூற­லாம்.சீனா­வின் புத்­தாண்டு கொண்­டாட்­டம் இம்­மாத இறு­தி­யில் துவங்கி, பிப்­ர­வரி 16ம் தேதி முடி­வ­டைய உள்­ளது. இதற்­கா­க­வும் தங்கம் கொள்­மு­தல் அதி­க­ரித்­தது.கடந்த வெள்­ளி­யன்று அமெ­ரிக்க அர­சு முடக்­கப்­படும் என்ற தக­வல் வெளி­யா­னது. வாஷிங்­டன் வெள்ளை மாளிகை மூடப்­படும், இத­னால் குறு­கிய கால கடன் அளிப்பு பில் செனட் சபை­யில் நிறை­வேற்­றப்­படும் என்ற கருத்து நில­வு­கிறது. இதற்கு முன், 2013ம் ஆண்டு சில நாட்­க­ளுக்கு மூடப்­பட்டு இருந்­தது, தற்­போது இதை தவிர்க்க டிரம்ப் அதி­கா­ரி­க­ளு­டன் ஆலோ­சித்து வரு­கி­றார்.இவ்­வா­றான அசா­தா­ரண சூழல், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­க­ளுக்கு சாத­க­மாக அமை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
செம்பு
செம்பு விலை­யா­னது, தொடர்ந்து மூன்று வாரங்­க­ளாக சரிந்து வரு­கிறது. லண்­டன் பொருள் வாணிப சந்­தை­யில் ஒரு டன், 7,312 டாலர் என்ற நிலையை, டிசம்­பர் 24ம் தேதி அன்று எட்­டி­யது. அதன் பிறகு வியா­பா­ரி­கள் லாபம் ஈட்­டு­தல் விளை­வாக, விலை­யில் சரிவு ஏற்­பட்­டது.கடந்த டிசம்பர் மாதத்­தில் மட்­டும் செம்பு, 7.2 சதவீதம் விலை உயர்ந்­தது. இதுகடந்த எட்டு ஆண்டில் பெரிய மாத உயர்வு ஆகும்.முன்­னணி செம்பு சுரங்­க­மான, ரியோ டிண்டோ உற்­பத்தி கடந்த, 2017ம் ஆண்டு 9 சத­வீ­தம் அள­வுக்கு குறைந்து 4 லட்சத்து, 78 ஆயிரத்து, 100 டன்­கள் ஆனது. இது­வும் விலைக்கு சாத­க­மாக அமைந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜனவரி 22,2018
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)