பங்குச் சந்தைபங்குச் சந்தை ... பாக்கெட்டில் பணம் தங்குமா? பாக்கெட்டில் பணம் தங்குமா? ...
நேரத்தையும் முதலீடு செய்யுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2018
05:21

பங்­கு­களை வாங்­கும் முடி­வு­களை எடுப்­பது ஒரு கலை என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும். பங்­கு­களை சரி­யாக தேர்வு செய்­யும் முறையை கற்க விரும்­பும் ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ரும், பங்கு வர்த்­த­கத்­தில் அதிக ஆர்­வம் செலுத்­து­வோ­ரும், இந்த புரி­தலை வெளிப்­ப­டுத்த வேண்­டும்.சந்­தை­யில் ஆர்­வம் காட்­டும் ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ருக்­கும், தன்னை ஒரு நல்ல பங்கு தேர்­வா­ள­ராக உரு­வாக்­கிக் கொள்ள, ஒரு தீவி­ரம் இருக்கும்.ஒரு சிறந்த பங்கு முதலீட்டாளர், தன்னை எப்­படி தயார்­ப­டுத்­திக் கொள்ள வேண்டும்?முத­லில் பங்­கு­களை வாங்­கு­வ­தி­லும், விற்­ப­தி­லும் செலுத்­தும் நேரத்தை குறைத்­துக் கொண்டு, அந்த நேரத்தை, அறி­வு­பூர்­வ­மான தேடல்­களில் செல­விட வேண்­டும். பல துறை சார்ந்த புரி­தல்­களை வளர்க்க முற்­பட வேண்­டும். இதற்கு வர்த்­த­கம், பொருளாதா­ரம், தொழில்­முறை, நுகர்வு, சட்­டம், கணக்கு, பொது­கொள்­கை­கள், சுற்­றுச்­சூ­ழல் கொள்­கை­கள், நிறு­வன ஆட்சி முறை­கள் என, பல துறை சார்ந்த புரி­தல்­களை வளர்த்­துக் கொள்ள வேண்டும்.அதிக கால அவ­கா­சம்இந்த துறை­களில் ஏற்­படும் தொடர் மாற்­றங்­கள், மற்­றும் அவை தொழில்­களின் மீது ஏற்­ப­டுத்­தும் தாக்­கத்தை தெளி­வாக கணிக்­கும் திறன் ஆகி­ய­வற்றை வளர்த்­துக் கொள்ள வேண்­டும். பன்­மு­கத் தன்மை ஒவ்­வொரு முத­லீட்­டா­ளர்­களுக்­கும் இருக்க வேண்­டிய அவ­சிய திறன் ஆகும்.சந்­தை­யில் வெற்­றி­யா­ளர்­க­ளாக விளங்­கும் நபர்­க­ளி­டம் இந்த திறன் தெளி­வாக வெளிப்­படும். இத்­த­கைய திறன்­கள் நம்­மில் உரு­வாக பல காலம் ஆகும் என்­பதை நாம் உணர்ந்து, அவற்றை ஏற்­ப­டுத்திக் கொள்ள முற்­பட வேண்­டும்.இவற்றை வளர்த்­துக் கொண்டு, முத­லீடு செய்ய வேண்­டு­மா­னால் பல காலம்­ஆ­குமே?ஒரு முத­லீட்­டா­ளர் இந்த திறன்­களில் தேர்ச்சி பெற அதிக கால அவ­கா­சம் தேவைப்­படும். ஆனா­லும், தொடர்ந்து திறன் மேம்­பாட்­டில் ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ரும் ஈடு­பட வேண்­டும். புரி­தல்­களை காலப்­போக்­கில் உரு­வாக்கி கொள்ள முற்­பட வேண்­டும். முத­லீட்­டில் செல­வி­டும் தேரத்­தை­விட, திறன் வளர்ப்­பில் அதிக நேரம் செலுத்த வேண்டும்.ஒரு முத­லீட்டு முடிவை எடுப்­ப­தற்கு, என்­னென்ன திறன்­கள் அவ­சி­யம் என்று முத­லில் பட்­டி­ய­லிட வேண்­டும். இது துறைக்கு துறை மாறு­படும். ஒவ்­வொரு துறை­யில் ஆய்வு செய்­யும் போதும், அந்த துறை சார்ந்த திறன்­களை வளர்த்­துக் கொள்ள வேண்­டும்.இப்­படி தொடர்ந்து பல துறை­களில் முத­லீடு செய்­யும்­போது, நம் திறன் மேம்­படும். திறன் மேம்­பாட்­டின் முக்­கிய அங்­க­மாக, புதிய துறை­களில் முத­லீடு செய்­வது அவ­சி­யம். அத்­த­கைய முத­லீ­டு­களை சிறிய தொகை­களில் செய்­தால், அது முத­லீட்­டா­ள­ரின் நிதி­நிலைக்கு பாதிப்பு ஏற்­படுத்­தாது இருக்கும்.வெற்றி நிச்­ச­யம்ஓர­ளவு புரி­தல் அமைந்­த­வு­டன், துவக்க முத­லீட்டை விரி­வாக்க, மேலும் தேவை­யான தொடர் புரி­தலை வளர்த்­துக் கொள்­வது அவ­சி­யம். இதற்கு பல துறை­சார் வல்­லு­னர்­கள் மற்­றும் சக முத­லீட்­டா­ளர்­க­ளு­டன் கலந்­தாய்வு செய்­வது நல்­லது.பகிர்வு அடிப்­ப­டை­யில், ஒரு துறை மற்­றும் குறிப்­பிட்ட நிறு­வ­னம் சார்ந்த நம் புரி­தல் விரி­வு­படும்.அதன்­மூ­லம் ஒரு முத­லீட்டு முடி­வில் ஏற்­படும் தெளி­வும், நம்­பிக்­கை­யும் அதன் வெற்­றிக்கு இன்­றி­ய­மை­யா­த­தாக அமை­யும். இந்த நம்­பிக்கை வளர்ப்பு சார்ந்த நகர்­வில் ஈடு­ப­டு­வதே, ஒரு முத­லீட்­டா­ள­ரின் நேரத்­தில் பெரும்­பங்கு செல­வா­கும்.பணத்தை முத­லீடு செய்து வெற்றி பெற விரும்­பு­வோர், முத­லில் நேரத்தை முத­லீடு செய்து, தயார்­ப­டுத்­திக் கொண்டால் வெற்றி நிச்­ச­யம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)