நேரத்தையும் முதலீடு செய்யுங்கள்நேரத்தையும் முதலீடு செய்யுங்கள் ... ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.63.94 ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.63.94 ...
பாக்கெட்டில் பணம் தங்குமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2018
05:22

2018 – 19ம் ஆண்­டுக்­கான நிதி நிலை அறிக்கை தாக்­கல் செய்­யப்­பட இன்­னும் இரண்டு வாரங்­களே உள்ள நிலை­யில், ஒவ்­வொரு துறை­யி­ன­ரும், தரப்­பி­ன­ரும் தங்­கள் எதிர்­பார்ப்­பு­களை முன்­வைத்து வரு­கி­ன்றனர்.நிதி அமைச்­ச­கத்­தின் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் பல்­வேறு தொழில் அமைப்­பு­கள் தங்­கள் எதிர்­பார்ப்­பு­களை மனு­வா­கவே கொடுத்­துள்ளன. நம்­மைப் போன்ற தனி­ந­பர்­கள், மத்­தி­ய­மர்­கள் எதிர்­பார்ப்­பு­கள் என்­னென்ன?வரு­மா­ன­ வரி உயர்வுஆண்டு வரு­வாய், 2.5 லட்சம் வரை, வரி ஏதும் இல்லை. இதை 5 லட்­சம்­வரை உயர்த்­த­லாமே என்­பது பல­ரது ஆசை. குறைந்­த­பட்­சம் 3 லட்­சம் வரை­யா­வது, அருண் ஜெட்லி உயர்த்­து­வார் என்­பதே எதிர்­பார்ப்பு.ஐந்து முதல், 10 லட்­சம் வரை வரு­வாய் ஈட்­டு­ப­வர்­க­ளுக்கு, 20 சத­வீ­த­மும், 10 லட்­சத்­துக்கு மேல் ஈட்­டு­ப­வர்­க­ளுக்கு, 30 சத­வீ­த­மும் வரி தற்­போது விதிக்­கப்­ப­டு­கிறது.இதில் மாற்­றம் வரும் என்­பது இன்­னொரு எதிர்­பார்ப்பு. 20 லட்­சத்­துக்கு மேல், 30 சத­வீ­த­மும், 10 – 20 லட்­சம் வரு­வாய் ஈட்­டு­ப­வர்­க­ளுக்கு, 20 சத­வீ­த­மும் வரி வசூல் செய்­யப்­ப­ட­லாம்.இத­னால், 5 – 10 லட்­சம் வரு­வாய் ஈட்­டு­ப­வர்­கள், 10 சத­வீத வரி மட்­டுமே செலுத்­தி­னால் போதும். மக்­கள் கையில் கொஞ்­சம் சேமிப்பு இருக்­கும் என்­பதே இதன் பின் இருக்­கும் நியா­யம்.வரி­ சே­மிப்புஇப்­போது, இ.பி.எப்., –பி.பி.எப்., தேசிய சேமிப்­புப் பத்­தி­ரங்­கள், ஆயுள் காப்­பீடு போன்­ற­வற்­றில் செய்­யப்­படும் முத­லீ­டு­க­ளுக்கு, 80சி.,யின் கீழ், 1.5 லட்­சம் ரூபாய் வரை வரி­ வி­லக்கு கிடைக்­கிறது.இதில் இன்­னும், 5௦ ஆயிரம் ரூபாயோ, ஒரு லட்­சம் ரூபாயோ கூடு­தல் வரி­வி­லக்கு கிடைக்­க­லாம்.இப்­ப­டிச் செய்­வ­தன் மூலம், மத்­தி­ய­மர்­கள் கூடு­த­லாக சேமிப்பு விஷ­யங்­களில் கவ­னம் செலுத்­து­வர். அந்­தத் தொகை பெரும்­பா­லும் பங்­குச் சந்­தைக்கு வந்­து­சே­ரும். அத­னால், பொரு­ளா­தா­ரம் மேம்­பட வாய்ப்­புண்டு என்­பது ஒரு கணக்கு.இன்­னொரு வரி­சே­மிப்பு, வீட்­டுக் கடன் வட்­டிக்­குக் கிடைக்­கும் விலக்கு. இப்­போது, 2 லட்­சம் ரூபாய் வரை­யுள்ள வரி­வி­லக்கு, 3 லட்­சம் ரூபாய் அள­வுக்கு உயர்த்­தப்­ப­ட­லாம். அதே­போல், பிரின்­சி­பல் தொகை­யில், 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்­கப்­படும் விலக்கு, 1 லட்­சம் ரூபாய் வரை உயர்த்­தப்­ப­ட­லாம்.சலு­கை­கள்இவை­யில்­லா­மல் மக்­கள்கையில் இன்­னும் கொஞ்­சம் பணம் சேர­ வேண்­டு­மென்­றால், பின்­வ­ரும் விஷ­யங்­க­ளை­யும் வர­வி­ருக்­கும் பட்­ஜெட் கணக்கில் எடுத்­துக்­கொண்டால் உப­யோ­க­மாக இருக்­கும்.1 மருத்­து­வத்­துக்­காக ஆகும் செல­வில், 15 ஆயிரம் வரை திரும்­பப் பெறும் வச­தியை சில நிறு­வ­னங்­கள் வழங்­கு­கின்றன. இது, 1999ல் நிர்­ண­யிக்­கப்­பட்ட தொகை. இதை உயர்த்­த­லாம். அதே­போல் வீட்டு வாட­கைப் படி, பய­ணப் படி, குழந்­தை­களின் கல்­விக்­கா­கக் கொடுக்­கப்­படும் தொகை­களும் உயர்த்­தப்­பட வேண்­டும்.2மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் கல்­விக் கட­னுக்­கான வட்­டித் தொகையை, எட்டு ஆண்­டு­கள் வரை காண்­பித்து, 80இ கீழ் வரி விலக்கு பெற­லாம். அதை இன்­னும் சில ஆண்­டு­கள் நீட்­டிக்­க­லாம்.3வங்­கி­களில் வழங்­கப்­படும் வட்­டித் தொகை 10 ஆயிரத்துக்கு மேல் போனால், டி.டி.எஸ்., பிடித்­தம் செய்­யப்­ப­டு­கிறது. இந்த அளவு 1997 நிர்­ண­யிக்­கப்­பட்ட தொகை. இதை இப்­போது இன்­னும் உயர்த்­திக் கொடுக்­க­லாம். இதன்­ மூ­லம், மக்­கள் கையில் இன்­னும் கொஞ்­சம் பணப்­புழக்­கம் அதி­க­ரிக்­கும்.4மூத்த குடி­மக்­கள் போட்­டி­ருக்­கும் நிரந்­தர வைப்­புத் தொகை­க­ளுக்கு கூடு­த­லான வரி­வி­லக்கு வழங்­கப்­ப­டு­வ­தோடு, அவர்­க­ளு­டைய மருத்­துவ செல­வு­க­ளுக்கு என்று கூடு­தல் விலக்­கும் அளிக்­கப்­பட வேண்­டும்.5தற்­போது, 3 லட்­ச­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்ள, லீவ் என்­கேஷ்­மென்ட் தொகையை, 10 லட்­சம் ரூபாய் வரை­யி­லும் உயர்த்­த­ வேண்­டும். இந்த உச்­ச ­பட்ச தொகை நிர்­ண­யிக்­கப்­பட்­டது, 1998ல். இப்­போ­தும் இதே தொகை இருப்­ப­தில் அர்த்­த­மில்லை.6பெற்­றோரைக் கவ­னித்­துக்­கொள்­ளும் பிள்ளை­களுக்­குக் கூடு­தல் சலுகை வழங்­கப்­ப­ட­லாம். பெற்­றோர்­களின் மருத்­து­வச் செலவு, இதர செல­வு­க­ளைக் கணக்­கில் எடுத்­துக் ­கொண்டு, பிள்­ளை­க­ளுக்­கான வரி­வி­லக்கை அதி­கப்­ப­டுத்­த­லாம்.முக்­கிய முன்­னேற்­றங்­கள்இவை­யில்­லா­மல் பின்­வ­ரும் மூன்று அம்­சங்­களும் கூடுதல் கவ­னம் பெறு­கின்றன.7குறைந்­த­பட்ச ஊதி­யத்தை மத்­திய அரசு 2016ல் உயர்த்­தி­யது. அன்­றா­டக் கூலி­யாக, 350 ரூபாயைக் கணக்­கில் எடுத்­துக்­கொண்டு, மாதத்­துக்கு, 9,100 ரூபாய் குறைந்­த­பட்ச ஊதி­ய­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டது. அது வரும் பட்­ஜெட்­டில், 18 ஆயிரம் ரூபா­யாக உயர்த்­தப்­ப­ட­லாம் என்­பது எதிர்­பார்ப்பு. வணிகர் அமைப்­பு­கள், அது, 21ஆயிரம் ரூபா­யாக உயர்த்­தப்­பட வேண்­டும் என, கோரிக்கை வைக்­கின்றன.8தேசிய வேலை­வாய்ப்பு கொள்கை ஒன்றை மத்­திய அரசு பட்­ஜெட்­டில் வெளி­யி­டும் என்­பது இன்­னொரு எதிர்­பார்ப்பு. பெரு­நி­று­வ­னங்­க­ளோடு, ஏரா­ள­மான வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கும் சிறு, குறு நிறு­வ­னங்­க­ளுக்­குத் தேவை­யான ஊக்­கத்தை வழங்­கு­வ­தற்கு இந்த கொள்கை வழி­செய்­யும்.9திறன் மேம்­பாட்­டுக்கு ஒதுக்­கப்­படும் நிதி, இந்த பட்­ஜெட்­டில் அதி­க­ரிக்­கப்­படும் என்­பது இன்­னொரு அவா. 2022க்குள் 40 கோடி பேருக்கு திறன்­மேம்­பாட்­டுப் பயிற்­சி­கள் வழங்­கப்­படும் என்­றது மத்­திய அரசு. அதை நிறை­வேற்­று­வ­தற்­கான நிதி ஆதா­ரத்தை அர­சு உயர்த்த­ வேண்­டும்.ஒவ்­வொரு நிதி­நிலை அறிக்­கை­யும் பெரும் ஆவ­லுக்­கு­ரி­யவை. உண்­மை­யான முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ளதா என்­பதை பட்­ஜெட் சொல்­லி­வி­டும். அரசுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. தங்­க­ளு­டைய முயற்­சி­க­ளைப் பறை­சாற்­றிக்­கொள்­ளும் அறிக்கை இது.வரும், 2019ம் ஆண்டு, பொதுத் தேர்­தல் ஆண்டு. இந்த ஆண்டு வழங்­கப்­படும் பட்­ஜெட் தான் இந்த ஆட்­சி­யின் முழு­மை­யான பட்­ஜெட். மக்­க­ளுக்­குத் தேவை ‘பொரு­ளா­தார அமைதி.’ தாம் சுபிட்­ச­மாக இருக்­கி­றோம் என்ற நம்­பிக்கை. பட்­ஜெட் தான் அந்த நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்த வேண்­டும். மத்­தி­ய­மர்­கள் அதற்­குத்­ தான் காத்­தி­ருக்­கின்றனர்.-– ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை ... மேலும்
business news
அரசாங்கங்களும், தனியார் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதையே, ... மேலும்
business news
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற ... மேலும்
business news
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)