பதிவு செய்த நாள்
23 ஜன2018
01:09
டாவோஸ் : ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை கொண்ட வளரும் நாடுகளில், இந்தியா, 62வது இடத்தை பிடித்துள்ளது.
ஐரோப்பாவில், பால்டிக் நாடுகளில் ஒன்றான, லிதுவேனியா, முதலிடத்தில் உள்ளது. டாவோசில், சர்வதேச பொருளாதார மாநாடு துவங்குவதற்கு முன், அதன் ஆய்வுப் பிரிவு, இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை தரம், ஸ்திரமான வாழ்க்கை சூழல், கடன் சுமையை அதிகரிக்காமல், வருங்கால தலைமுறையினரை பாதுகாத்தல் ஆகிய அம்சங்களின் அடிப்படையில், ஒரு நாட்டின், ‘அனைவருக்குமான வளர்ச்சி குறியீடு’ தயாரிக்கப்படுகிறது. இதன்படி, பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டு வரும், 79 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
வளரும் நாடுகளுக்கான இந்த பட்டியலில், சீனா, 26வது இடத்திலும், பாகிஸ்தான், 47வது இடத்திலும் உள்ளன. கடந்த ஆண்டு, இந்த பட்டியலில், இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகியவை, முறையே, 60, 15 மற்றும், 52வது இடங்களில் இருந்தன. முன்னேறிய நாடுகளில், அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், சிறப்பான வாழ்க்கை சூழல் அமைத்து தருவதிலும், நார்வே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|