பதிவு செய்த நாள்
24 ஜன2018
00:55

டாவோஸ் : ‘‘பாலின பாகுபாட்டை அகற்றி, சமூகத்திலும், பணிகளிலும், பெண்கள் முன்னேற்றத்தில் தீவிர கவனம் செலுத்தினால், இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும்,’’ என, பன்னாட்டு நிதியத்தின் தலைவர், கிறிஸ்டின் லகார்டே கூறியுள்ளார்.
அவர், டாவோஸ் நகரில், உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பேசியதாவது: இந்தியா, நிதிச் சேவை துறையில் செய்து வரும் சீர்திருத்தங்களை தொடர வேண்டும். அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை பரவலாக்கவும், அதில், பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளில், ஆண்களுக்கு இணையான அளவிற்கு, பெண்களின் பங்களிப்பு உயர்த்தப்பட்டால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில், 27 சதவீதம் உயரும் என, பன்னாட்டு நிதியத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கிராமப்புறங்களில், பெண்கள் மீதான பாகுபாடு அதிகமாக உள்ளது. உடனடியாக, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். உலகில், வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நாடுகளில் ஒன்றாக, இந்தியா உள்ளது. நடப்பாண்டு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7.4 சதவீதம்; ௨௦௧௯ல், 7.8 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|