பதிவு செய்த நாள்
24 ஜன2018
01:00

புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத் டைனமிக்ஸ் நிறுவனம், 1970ல் துவங்கப்பட்டது. ஏவுகணை, ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் ஈடுபடும் இந்நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது. இதற்கான ஆவணங்களை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் தாக்கல் செய்துள்ளது.
கடந்த நிதியாண்டில், இந்நிறுவனம் நிகர லாபமாக, 2,212 கோடி ரூபாய் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தையும் சேர்த்து, ஒரு மாதத்திற்குள், பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி, ‘செபி’யிடம், பொதுத் துறையைச் சேர்ந்த நான்கு நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளன.
ஏற்கனவே, பொதுத் துறையைச் சேர்ந்த, மிஷ்ர தத்து நிகாம், ரைட்ஸ், இரிடா ஆகிய மூன்று நிறுவனங்கள், பங்கு வெளியீட்டில் களமிறங்க, ‘செபி’யிடம் அனுமதி கோரி உள்ளன. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள், இந்த நான்கு நிறுவனங்களின் பங்கு வெளியீடு நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|