பதிவு செய்த நாள்
25 ஜன2018
02:48

புதுடில்லி : மாருதி சுசூகி நிறுவனம், ‘இ – சர்வைவர்’ என்ற, மாதிரி மின் காரை தயாரித்து உள்ளது.உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார், டில்லியில், பிப்., 9ல் துவங்கும், சர்வதேச வாகன கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.இத்துடன், மேம்படுத்தப்பட்ட, ‘அரேனா, நெக்ஸா’ வாகனங்கள் உட்பட, 18 வகையான புதிய கார்கள், இந்த கண்காட்சியில் இடம் பெற உள்ளதாக, மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.ஏற்கனவே இந்நிறுவனம், 2020ல், மின் கார் விற்பனையை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அடுத்த தலைமுறைக்கான, ‘சுசூகி ஹைபிரிட்’ மின் வாகனங்களின் தொழில்நுட்ப செயல்பாடுகளையும் காட்சிப்படுத்த, மாருதி திட்டமிட்டு உள்ளது.இத்துடன், மூன்றாம் தலைமுறை, ‘சுவிப்ட்’ மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும், ‘ஹைபிரிட்’ வாகனங்களும், இக்கண்காட்சியில் இடம் பெற உள்ளன.பிப்., 14 வரை நடைபெற உள்ள, சர்வதேச வாகன கண்காட்சியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வாகன நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|