மாருதியின், ‘இ – சர்வைவர்’ மாதிரி மின் கார் அறிமுகம்மாருதியின், ‘இ – சர்வைவர்’ மாதிரி மின் கார் அறிமுகம் ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 63.47 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 63.47 ...
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கணிப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2018
02:49

டாவோஸ் : ‘‘பண மதிப்பு நீக்க நட­வ­டிக்கை, ஜி.எஸ்.டி., அறி­மு­கம் ஆகி­ய­வற்­றுக்கு பின், இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு, புதிய வாய்ப்­பு­கள் உரு­வாகி வரு­கின்றன. அவற்றை பயன்­ப­டுத்­திக் கொள்­வ­தில்,தீவி­ர­மாக உள்­ளோம்,’’ என, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைமை செயல் அதி­காரி, சந்தா கோச்­சார் தெரி­வித்துள்­ளார்.சுவிட்­சர்­லாந்­தின், டாவோஸ் நக­ரில், சர்­வ­தேச பொரு­ளா­தார மாநாட்­டில் பங்­கேற்ற அவர், செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­தா­வது:இந்­தி­யா­வின் அமைப்பு சார்ந்த துறை­களில், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள், ஓர் அங்­க­மாக, அதி­க­ள­வில் இணை­கின்றன. இத­னால், பல்­வேறு பிரி­வு­களில், மிகப்­பெ­ரிய வளர்ச்சி வாய்ப்­பு­க­ளுக்­கான சூழல் உரு­வாகி உள்­ளது.மத்­திய அர­சும், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு, அதி­க­ள­வில் கடன் வழங்­கு­வதை ஊக்­கு­விக்­கிறது. வங்­கி­களின் கடன் வளர்ச்சி பாதிப்­பும், வாராக்­க­டன் பிரச்­னை­யும், அவற்­றின் பிர­தான நிதிச் சேவை­களில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இதற்கு தீர்வு காணும் வகை­யில், பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு, 2.11 லட்­சம் கோடி ரூபாய்க்கு, மறு பங்கு மூல­தன திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது.இதன் கார­ண­மா­க­வும், அர­சின் கட்­ட­மைப்பு திட்­டங்­கள் புத்­து­யிர் பெற்று வரு­வ­தா­லும், முத­லீ­டு­க­ளுக்­கான சூழல், மேலும் மேம்­படும். இத­னால், தனி­யார் நிறு­வ­னங்­களின் முத­லீ­டு­கள் அதி­க­ரிக்­கும்.இத்­த­கைய வளர்ச்­சி­யில் பங்­கேற்­கவே, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி விரும்­பு­கிறது. சர்­வ­தேச வங்கி என்­ப­தால், பொரு­ளா­தா­ரத்­தில் உரு­வா­கும் ஒவ்­வொரு வளர்ச்சி வாய்ப்­பை­யும், வங்கி இது­வரை பயன்­ப­டுத்தி வந்­துள்­ளது.போட்டி நிறைந்த நிதித் துறை­யில், தொழில்­நுட்ப பயன்­பாட்­டில், வங்கி, முத­லி­டத்­தில் உள்­ளது. வங்­கி­யின் சில்­லரை கடன் பிரிவு, 18 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மான வளர்ச்­சியை கண்டு வரு­கிறது. அத­னால், கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களின் வர்த்­த­கம் குறைந்­தா­லும், இதர பிரி­வு­களில், வங்­கி­யின் வளர்ச்சி நன்கு உள்­ளது.இடர்ப்­பாட்டு கடன்­க­ளுக்கு தீர்வு காண்­ப­தி­லும், வங்கி முன்­னி­லை­யில் உள்­ளது. தேசிய நிறு­வ­னங்­கள் சட்ட தீர்ப்­பா­யத்­தில், முதன்­மு­த­லாக, வாராக்­க­டன் வழக்கை கொண்டு சென்ற சிறப்­பும், வங்­கிக்கு உள்­ளது.தற்­போது, ரிசர்வ் வங்­கி­யின் வழி­காட்­டு­தல்­படி, வாராக்­க­டன் தொடர்­பாக, ஏரா­ள­மான நிறு­வ­னங்­களின் வழக்­கு­களை, தீர்ப்­பா­யம் விசா­ரிக்­கிறது.நிறு­வன திவால் சட்­டம், வங்­கி­களின் வாராக்­க­டன் பிரச்­னையை பெரு­ம­ளவு குறைக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இத­னால், வங்­கி­கள், அவற்­றின் செயல்­பா­டு­களை மேம்­ப­டுத்­து­வ­தில் கவ­னம் செலுத்த முடி­யும். வாராக்­க­டன்­கள் குறித்து, வங்­கி­கள் காலம் தாழ்த்­தாது முடிவு எடுத்­தால், சொத்து மதிப்­பின் இழப்பை குறைக்­க­லாம். வங்கி துறையை பொறுத்­த­வரை, வாராக்­க­டன்­க­ளுக்கு தீர்வு காண்­ப­தி­லும், கடன் மீட்பு நட­வ­டிக்­கை­க­ளி­லும், இன்­னும் அதிக கவ­னம் செலுத்த வேண்­டி­யது அவ­சி­யம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

போட்டி நிறைந்த நிதித் துறை­யில், தொழில்­நுட்ப பயன்­பாட்­டில், வங்கி, முத­லி­டத்­தில் உள்­ளது. வங்­கி­யின் சில்­லரை கடன் பிரிவு, 18 சத­வீ­தத்­திற்­கும்அதி­க­மான வளர்ச்­சியை கண்டு வரு­கிறது. அத­னால், கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களின் வர்த்­த­கம் குறைந்­தா­லும், இதர பிரி­வு­களில், வங்­கி­யின் வளர்ச்சி நன்கு உள்­ளது.--ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)