டாடா தொலை தொடர்பு சேவை பிரிவை ரூ.6,500 கோடிக்கு வாங்கும் ஊழியர்கள்டாடா தொலை தொடர்பு சேவை பிரிவை ரூ.6,500 கோடிக்கு வாங்கும் ஊழியர்கள் ... கடையாணி கடையாணி ...
அமைப்பு சாரா பிரிவிற்கு, ‘யுவின்’ அட்டை; பி.எப்., – இ.எஸ்.ஐ., பணிக்கொடை எல்லாம் கிடைக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2018
01:17

புதுடில்லி : அமைப்பு சார்ந்த துறை­யி­னர் பெறும், சமூக பாது­காப்பு பயன்­கள் அனைத்­தும், அமைப்பு சாரா துறை­யி­ன­ருக்­கும் கிடைக்க வேண்­டும் என்ற நோக்­கத்­தில், ‘யுவின்’ அடை­யாள அட்டை திட்­டத்தை, மத்­திய தொழி­லா­ளர் நலத்­துறை அமைச்­ச­கம் அறி­மு­கப்­ப­டுத்துள்­ளது.இதன் மூலம், சைக்­கிள் ரிக் ஷா ஓட்­டு­னர் முதல், கூலித்­தொ­ழி­லா­ளர்­கள் வரை, பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்த, 47 கோடி பேர் பயன் பெறு­வர்.

இது குறித்து, மத்­திய அரசு உய­ர­தி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: மத்­திய தொழி­லா­ளர் நல அமைச்­ச­கம், அனைத்து பணி­யா­ளர்­களின் சமூக பாது­காப்பு மற்­றும் நல்­வாழ்­விற்கு உறுதி அளிக்­கும் மசோ­தாவை உரு­வாக்கி உள்­ளது. அதன்­படி, அமைப்பு சாரா தொழி­லா­ளர்­களின் சமூக பாது­காப்பை உறுதி செய்­யும், ‘யுவின்’ திட்­டம், நடை­மு­றைக்கு வர உள்­ளது.

நாடு முழு­வ­தும், ‘அமைப்பு சாரா தொழி­லா­ளர் குறி­யீட்டு எண்’ கொண்ட, ‘யுவின்’ அட்­டைக்­கான பதிவு, ஏப்., 1 முதல் துவங்க உள்­ளது. இதை­ய­டுத்து, 2019 மார்ச்­சுக்­குள், அமைப்பு சாரா துறை­யைச் சேர்ந்த அனைத்து தொழி­லா­ளர்­க­ளுக்­கும், ‘யுவின்’ அட்டை வழங்க, மத்­திய தொழி­லா­ளர் நல அமைச்­ச­கம் திட்­ட­மிட்டு உள்­ளது. ஏற்­க­னவே, சோதனை அடிப்­ப­டை­யில், வெற்­றி­க­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்ட இத்­திட்­டம், நாடு முழு­வ­தும் பர­வ­லாக்­கப்­படும் போது, அமைப்பு சாரா துறை­யைச் சேர்ந்த, 47 கோடி பேர் பயன் பெறு­வர்.

அவர்­க­ளுக்கு, இந்த அட்டை மூலம், அமைப்பு சார்ந்த துறை­யி­ன­ருக்கு நிக­ரான, பி.எப்., – இ.எஸ்.ஐ., உள்­ளிட்ட, அனைத்து பயன்­களும் கிடைக்­கும்.இதில், பி.எப்., எனப்­படும், வருங்­கால சேம­நல நிதி­யம், இ.எஸ்.ஐ., எனப்­படும், தொழி­லா­ளர் மருத்­துவ ஈட்­டு­றுதி கழ­கம் ஆகி­ய­வற்­றுக்­கான பங்­க­ளிப்பை, யார் செலுத்­து­வது என்­பது குறித்து தான், தீவி­ர­மாக ஆலோ­சிக்­கப்­ப­டு­கிறது. இந்த நிதி­யங்­க­ளுக்கு, அமைப்பு சார்ந்த துறை­யில், பணி­யா­ளர்­க­ளு­டன், நிறு­வ­னங்­களும் குறிப்­பிட்ட தொகையை, அவற்­றின் பங்­காக வழங்­கு­கின்றன.

ஆனால், அமைப்பு சாரா துறை­யில், நிறு­வ­னங்­களின் கீழ் வரா­மல், தனித்து செயல்­படும், எலக்ட்­ரி­ஷி­யன், பிளம்­பர் போன்­றோ­ருக்கு, யார் தவணை தொகை செலுத்­து­வது என்­ப­தில் தான், இன்­னும் முடிவு எட்­டப்­ப­டா­மல் உள்­ளது.

தொழி­லா­ளர் சமூக பாது­காப்பு மசோ­தா­வில், ‘நிறு­வ­னம் இல்­லாத பட்­சத்­தில், தனி­ந­பரே, முதன்மை நிறு­வ­ன­ராக கரு­தப்­ப­டு­வார்’ என்ற விதி­முறை உள்­ளது. அத­னால், இந்த சட்­டம் அம­லுக்கு வரும் போது, முதன்மை நிறு­வ­ன­ரின் பங்­க­ளிப்­பில், எந்த சிக்­க­லும் இருக்­காது என­லாம். அமைப்பு சாரா துறை­யி­ன­ரின் சமூக பாது­காப்பு அர­ணாக, ‘யுவின்’ திட்­டம் விளங்­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

சமூக பாதுகாப்பு:
தொழி­லா­ளர்­க­ளுக்­கான, வருங்­கால சேம­நல நிதி, மருத்­துவ ஈட்­டு­றுதி, பிர­சவ கால பயன்...பணிக்­கொடை, இழப்­பீடு, சமூக பாது­காப்பு உள்­ளிட்ட, 15 சட்­டங்­களின் தொகுப்­பாக, தொழி­லா­ளர் சமூக பாது­காப்பு மசோ­தாவை, மத்­திய தொழி­லா­ளர் நல அமைச்­ச­கம் உரு­வாக்கி உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)