இந்திய சந்தைக்கு வரும் இரண்டு வாகன நிறுவனங்கள்இந்திய சந்தைக்கு வரும் இரண்டு வாகன நிறுவனங்கள் ... ரூபாயின் மதிப்பும் சரிவு - ரூ.63.67 ரூபாயின் மதிப்பும் சரிவு - ரூ.63.67 ...
பன்முக சரக்கு போக்குவரத்துக்கு ஒரே வரி; ‘சியாம்’ அமைப்பு அரசுக்கு கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2018
00:18

புதுடில்லி : ‘சாலை, ரயில், கப்­பல் ஆகி­ய­வற்­றின் வாயி­லாக நடை­பெ­றும் சரக்கு போக்­கு­வ­ரத்­துக்கு, ஒரே ஜி.எஸ்.டி., நடை­மு­றையை அமல்­ப­டுத்த வேண்­டும்’ என, இந்­திய வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பான, ‘சியாம்’ மத்­திய வர்த்­தக அமைச்­ச­கத்தை வலி­யு­றுத்­தியுள்­ளது.

இது குறித்து, இந்த அமைப்­பி­னர் கூறி­ய­தா­வது: வாகன நிறு­வ­னங்­கள், அவற்­றின் தயா­ரிப்­பு­களை சாலை, ரயில், கப்­பல் மூலம் அனுப்­பு­கின்றன. சாலை மார்க்­கத்­தில் கொண்டு செல்­லப்­படும் வாக­னங்­கள், சரக்கு ரயி­லுக்கு மாற்­றப்­பட்டு, மீண்­டும் கன­ரக வாக­னங்­கள் மூலம், துறை­மு­கம் வாயி­லாக, கப்­ப­லுக்கு கொண்டு செல்­லப்­ப­டு­கின்றன. இந்த வகை­யில், வாகன ஏற்­று­ம­தி­யில் சாலை, ரயில் மற்­றும் கடல் வழி போக்­கு­வ­ரத்­தின் ஒருங்­கி­ணைந்த பங்­க­ளிப்பு உள்­ளது.

ஒரு வாகன தொகுப்பை விற்­ப­னைக்கு அனுப்­பு­வ­தில், இத்­த­கைய பல நிலை­களில் நடை­பெ­றும் போக்­கு­வ­ரத்­திற்கு, உள்­ளூர் வரி உட்­பட பல வகை வரி­கள் வசூ­லிக்­கப்­ப­டு­கின்றன. மேலும், பன்­முக சரக்கு போக்­கு­வ­ரத்­தில், தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், அந்­தந்த போக்­கு­வ­ரத்­துக்­கான ஆவ­ணங்­க­ளை­யும் தயா­ரிக்க வேண்­டி­யுள்­ளது. ஒருங்­கி­ணைந்த, பன்­முக சரக்கு போக்­கு­வ­ரத்து தொடர்­பான, தற்­போ­தைய ஜி.எஸ்.டி., சட்­டம், வரி ஆலோ­ச­கர்­கள் அல்­லது வரித் துறை வல்­லு­னர்­களின் முடிவை பொறுத்­த­தாக உள்­ளது.

எனவே, சாலை, ரயில், கப்­பல் உள்­ளிட்ட அனைத்து வழி­க­ளி­லும் மேற்­கொள்­ளும் பன்­முக சரக்கு போக்­கு­வ­ரத்தை, தனித்­த­னியே பிரித்து பார்க்­கா­மல், ஒரே போக்­கு­வ­ரத்­தாக கருதி, ஜி.எஸ்.டி., நிர்­ண­யிக்க வேண்­டும். இத்­த­கைய நடை­முறை அம­லுக்கு வந்­தால், நிறு­வ­னங்­கள், அவற்­றின் தயா­ரிப்­பு­களை, ஒரே ஆவ­ணம் மூலம் விரை­வா­க­வும், சுல­ப­மா­க­வும், விற்­ப­னை­யா­ள­ரி­டம் கொண்டு சேர்க்க முடி­யும். இத­னால், நேர­மும், பண­மும் மிச்­ச­மா­கும்.

தொழிற்­சா­லை­யில் தயா­ரிக்­கப்­படும் ஒரு வாக­னம், ஒரே ஆவ­ணம் மூலம் சாலை, ரயில், கப்­பல் மூலம் இறு­தி­யாக விற்­ப­னை­யா­ளரை சென்­ற­டைய வழி செய்ய வேண்­டும் என, மத்­திய வர்த்­தக அமைச்­ச­கத்­தி­டம் தெரி­விக்­கப்­பட்­டது. இப்­பி­ரச்னை, ஜி.எஸ்.டி., கவுன்­சில் கவ­னத்­திற்கு கொண்டு செல்­லப்­படும் என, அமைச்­ச­கம் உறுதி அளித்­துள்­ளது. இவ்­வாறு அவர்­கள் தெரி­வித்­த­னர்.

இது குறித்து, மத்­திய வர்த்­தக அமைச்­சக உய­ர­தி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: பன்­முக வாகன போக்­கு­வ­ரத்­துக்கு, ஒரே ஜி.எஸ்.டி., விதிக்க வேண்­டும் என, ஜி.எஸ்.டி., கவுன்­சி­லி­டம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், சரக்கு போக்­கு­வ­ரத்து செல­வி­னங்­களை குறைப்­பது தொடர்­பாக, சிறப்பு செய­லர் தலை­மை­யில் ஒரு நபர் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

வேலைவாய்ப்பு:
நாட்­டின் சரக்கு போக்­கு­வ­ரத்து, அடுத்த இரண்டு ஆண்­டு­களில், தற்­போ­தைய, 16 ஆயி­ரம் கோடி டால­ரில் இருந்து, 21 ஆயி­ரத்து 500 கோடி டால­ராக வளர்ச்சி காணும். கடந்த ஐந்து ஆண்­டு­களில், இத்­து­றை­யின் வேலை­வாய்ப்பு, ஆண்­டுக்கு, 7.8 சத­வீத சரா­சரி வளர்ச்­சி­யு­டன், 2.20 கோடி­யாக உயர்ந்­துள்­ளது என, மத்­திய அர­சின் பொருாளா­தார ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)