இந்திய கார்கள் இறக்குமதி பிரிட்டனில் 8 சதவீதம் உயர்வுஇந்திய கார்கள் இறக்குமதி பிரிட்டனில் 8 சதவீதம் உயர்வு ... ஆன்லைன் வர்த்தக வளர்ச்சி 26 சதவீதம் சரிவு ஆன்லைன் வர்த்தக வளர்ச்சி 26 சதவீதம் சரிவு ...
இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி வரம்பு உயர வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2018
03:40

புதுடில்லி : மத்­திய நிதி­ய­மைச்­சர் அருண் ஜெட்லி, இன்று, 2018 – 19ம் நிதி­யாண்­டின் மத்­திய பட்­ஜெட்டை, பார்­லி­மென்­டில் தாக்­கல் செய்ய உள்­ளார். இது, பா.ஜ., அர­சின் கடைசி பட்­ஜெட் என்­ப­தால், ஊதி­ய­தா­ரர்­கள், நிறு­வ­னங்­கள், நுகர்­வோர் உட்­பட, அனைத்து தரப்­பி­லும், பலத்த எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

எர்­னஸ்ட் யங் நிறு­வ­னம் நடத்­திய ஆய்­வில், 69 சத­வீ­தம் பேர், வரு­மான வரி வரம்பு உய­ரும் என, நம்­பிக்கை தெரி­வித்து உள்­ள­னர். மத்­திய பட்­ஜெட்­டில், வரு­மான வரி வரம்பு, தற்­போ­தைய, 2.50 லட்­சம் ரூபா­யில் இருந்து, 3 லட்­சம் ரூபா­யாக உயர்த்­தப்­படும் என, தெரி­கிறது. ‘இத­னால், 75 லட்­சம் பேர், வரு­மான வரி செலுத்­து­வ­தில் இருந்து விலக்கு பெறு­வர்’ என, எஸ்.பி.ஐ., எகோ­ரப் ஆய்­வ­றிக்கை தெரி­விக்­கிறது.

தற்­போது, 3 – 5 லட்­சம் ரூபாய் வரை­யி­லான வரு­வாய்க்கு, 5 சத­வீத வரி வசூ­லிக்­கப்­ப­டு­கிறது. இந்த வரம்பு, 6 லட்­சம் ரூபா­யாக உயர்த்­தப்­ப­ட­லாம். இதை­ய­டுத்து, 6 – 12 லட்­சம் ரூபாய் வரை, 20 சத­வீ­தம்; 12 லட்­சம் ரூபாய்க்கு மேற்­பட்ட வரு­வாய்க்கு, 30 சத­வீ­தம் என, வரி நிர்­ண­யிக்­கப்­ப­ட­லாம். ‘‘இத­னால், 6 லட்­சம் ரூபாய்க்கு மேற்­பட்ட வரு­வா­யி­ன­ருக்கு, ஆண்­டுக்கு, 15 ஆயி­ரம் ரூபாய் வரிச் சலுகை கிடைக்­கும்,’’ என கூறு­கி­றார், வரி ஆலோ­ச­க­ரான, ரவி குப்தா.

மத்­திய தர வகுப்­பி­னர், குறிப்­பாக, மாத ஊதி­யம் பெறு­வோ­ருக்கு, வரி வரம்பு உயர்வு மூலம், ஓர­ளவு நிவா­ர­ணம் கிடைக்­கும். மத்­திய அரசு, ‘பாரத்­மாலா’ திட்­டத்­தின் கீழ், நாடு முழு­வ­தும் சாலை போக்­கு­வ­ரத்து வச­தி­களை மேம்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ளது. இதை­யொட்டி, பட்­ஜெட்­டில், மத்­திய சாலை போக்­கு­வ­ரத்து மற்­றும் தேசிய நெடுஞ்­சாலை அமைச்­ச­கத்­திற்கு கூடு­தல் நிதி ஒதுக்­கப்­படும் என, தெரி­கிறது.

கார்ப்­ப­ரேட் நிறு­வன வரி, 30 சத­வீ­தத்­தில் இருந்து, படிப்­ப­டி­யாக, 25 சத­வீ­த­மாக குறைக்­கப்­படும் என, 2016 பட்­ஜெட்­டில் அறி­விக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, நடப்பு நிதி­யாண்டு பட்­ஜெட்­டில், 5 கோடி ரூபாய்க்­கும் குறை­வான விற்­று­மு­தல் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு, 29 சத­வீ­த­மாக வரி குறைக்­கப்­பட்­டது. இது, மேலும் குறைக்­கப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பங்கு விற்­ப­னை­யில், மூல­தன ஆதாய வரி விலக்கு வரம்பு, ஓராண்­டில் இருந்து, மூன்று ஆண்­டு­க­ளாக உயர்த்­தப்பட­லாம். மத்­திய அரசு, வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வ­தில் மிகத் தீவி­ர­மாக உள்­ளது.குறிப்­பாக, தொழி­லா­ளர்­கள் சார்ந்த துறை­களில், வேலை­வாய்ப்­பு­களை அதி­க­ரிக்­கும் நோக்­கில், தேசிய வேலை­வாய்ப்புகொள்கை, பட்­ஜெட்­டில் அறி­விக்­கப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

விவ­சா­யி­களின் வரு­வாயை, 2022ல் இரு மடங்­காக உயர்த்­து­வோம் என, ஏற்­க­னவே மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது. இதை­யொட்டி, பட்­ஜெட்­டில், கிரா­மப்­புற மேம்­பாடு மற்­றும் சமூக நல திட்­டங்­க­ளுக்கு அதிக தொகை ஒதுக்­கப்­பட வாய்ப்­புள்­ளது.

மத்­திய பட்­ஜெட்­டில், வேளாண் துறை, குறு,சிறு,நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறை, அடிப்­படை கட்­ட­மைப்பு வசதி, அனை­வ­ருக்­கும் வீடு ஆகிய திட்­டங்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கும் வகை­யில் முக்­கிய அறி­விப்­பு­கள் இடம் பெறும் என, தெரி­கிறது.
-சவு­மியா காந்தி கோஷ், பொரு­ளா­தார வல்­லு­னர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் பிப்ரவரி 01,2018
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)