மத்திய பட்ஜெட் : சில அரிய தகவல்கள்மத்திய பட்ஜெட் : சில அரிய தகவல்கள் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு ...
மத்திய பட்ஜெட் : முழு விபரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2018
13:00

புதுடில்லி : 2018-19 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பார்லியில் இன்று (பிப்.,1) தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் :

உலகில் பொருளாதார வளர்ச்சி நாடுகளில் இந்தியா வோத இடத்தில் உள்ளது. பணமதிப்பிழப்பு போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், நேரடி அந்நிய முதலீடும் அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 2.5 ட்ரில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் அரசு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா பொருளாதாரம் 8 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. 2018-19 ம் நிதியாண்டின் 2வது பாதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 முதல் 7.5 சதவீதம் வரை உயரும்.


நிதி ஒதுக்கீடு :

வேளாண் சந்தைகள் அமைக்க ரூ.2000 கோடி ஒதுக்கீடு
கால்நடை மற்றும் மீன்வளத்துறைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
விவசாய உள்கட்டமைப்பிற்கு ரூ.22,000 கோடி நிதி ஒதுக்கீடு
மூங்கில் வளர்ப்பை ஊக்குவிக்க தேசிய மூங்கில் இயக்கத்தின் கீழ் ரூ.1290 கோடி ஒதுக்கப்படும்.
குடிசை தொழில் மூலம் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் சிறு விவசாயிகளுக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு
பாசன வசதியில்லாத 96 மாவட்டங்களுக்கு நிலத்தடி நீர்வசதி ஏற்படுத்தி தர ரூ.2600 கோடி ஒதுக்கீடு
ஆபரேஷன் க்ரீன் திட்டம் மூலம் அழுகும் காய்கறிகளை பதப்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக மாதம் 500 வழங்க ரூ.600 கோடி ஒதுக்கீடு
புதிய இலவச மருத்துவ வசதி திட்டத்திற்காக சுகாதாரத்துறைக்கு ரூ.1200 கோடி ஒதுக்கீடு

ஏழை, எளிய குடும்பங்களுக்கு மின் வசதி வழங்க ரூ. 16,000 கோடி ஒதுக்கீடு

கிராமப்புற வேலைவாய்ப்பு, நீர்ப்பாசன மேம்பாட்டுக்கு ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு

கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளுக்காக ரூ. 16,713 கோடி ரூபாய் ஒதுக்கீடு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 99 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ரூ.2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு

ரயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி கடனுதவி

ஜவுளித்துறை வளர்ச்சிக்காக ரூ.7,148 கோடி ஒதுக்கீடு

டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ரூ.3073 கோடி ஒதுக்கீடு

கிராமங்களில் இணையதள வசதிகளை ஏற்படுத்த ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
மும்பை மாநகர ரயில்வே வசதிகளுக்கு ரூ.11000 கோடி ஒதுக்கீடு
பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.17000 கோடி ஒதுக்கீடு


புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புக்கள் :


விளை பொருள் ஏற்றுமதியை ஊக்குவிக்க பிரம்மாண்டமான உணவ பூங்காக்கள் அமைக்கப்படும்.
8 கோடி ஏழை பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு. ஏழைகளுக்கான இலவச சிலிண்டர் இணைப்ப திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்.
4 கோடி கிராமப்புற வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சார இணைப்பு.
2 கோடி கழிப்பறைகள் அடுத்த ஒரு வருடத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்படும்.
விவசாயிக்கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.
விவசாய கழிவுகளை எரிக்காமல் பயன்படுத்த புதிய திட்டம்.
கிசான் கிரெடிட் கார்டு வசதியை மீன்வளம் மற்றும் கால்நடை துறைக்கு விரிவாக்கம் செய்ய பரிந்துரை
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 75,000 கோடி கடன் வழங்க இலக்கு
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 51 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
கல்வி தரத்தை மேம்படுத்த 13 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி
குஜராத் மாநிலம் வதோதராவில் ரயில்வே பல்கலை., திறக்க திட்டம்
நாடு முழுவதும் 1.5 லட்சம் சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.
பழங்குடியினரின் குழந்தைகளுக்கான கல்விக்காக ஏகலவ்யா என்ற தனித்திட்டம் தொடங்கப்படும்
பிடெக் மாணவர்கள் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு பிஎச்டி படிக்க உதவி செய்யப்படும்.
தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் மூலம் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு
நாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். பார்லி., தொகுதிகளுக்கு ஒரு மருத்துவ கல்லூரியும், ஒரு அரசு மருத்துவ கல்லூரியும் அமைக்கப்படும்
10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ செலவுக்காக வழங்கப்படும்
பள்ளிகளில் கரும்பலகைகள் அகற்றப்பட்டு டிஜிட்டல் போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளது
சுற்றுலா துறையை மேம்படுத்த தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை
70 லட்சம் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம்
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சிசிடிவி பொருத்தும் பணிகள் விரைவு படுத்தப்படும்.
4000 க்கம் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்களில் ஆட்கள் நியமிக்கப்படுவர்
25,000 ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் அமைக்கப்படும்
விமான நிலையங்களின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரிக்கப்படும்.
பெரம்பலூரில் அதிநவீன ரயில்பெட்டிகள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்.
9,000 கி.மீ., தொலைவிற்கு புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.
அனைத்து ரயில் நிலையங்களிலும் வைஃபை வசதி
18,000 கி.மீ.,க்கு இரட்டை ரயில் பாதை
கங்கை நதியை தூய்மைப்படுத்த 187 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்
வருங்கால வைப்பு நிதிக்கு பணியில் சேர்ந்த முதல் 3 ஆண்டுகளில் பெண்கள் 8 சதவீதம் செலுத்தினால் போதும்.
வரலாற்று சிறப்புமிக்க 10 சுற்றுலா தலங்களை நாட்டின் அடையாளமாக மாற்றப்படும்.
'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் பாதுகாப்புத்துறை உபயோகப்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் சிறு, குறு தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும்.
அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் ஆதார் போல் தனி அடையாள அட்டை வழங்கப்படும்.
பொதுமக்கள் தங்கத்தை எளிதாக மாற்றிக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்படும்.
2 ராணுவ தளவாட உற்பத்தி முனையங்கள் ஏற்படுத்தப்படும்
மாநில கவர்னர்களுக்கான சம்பளம் ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்படும்.
துணை ஜனாதிபதி சம்பளம் ரூ.4 லட்சமாக உயர்வு
ஜனாதிபதியின் மாத சம்பளம் ரூ.5 லட்சமாக உயர்வு
பணவீக்கத்திற்கு ஏற்ப எம்பி.,க்களின் சம்பளம் ஒவ்வொறு 5 ஆண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். ஏப்ரலுக்கு பிறகு படிகள் உயர்த்தப்படும்.
பிட்காயின் பணமுறை ஒழிக்கப்படும். வருமான வரித்துறையின் கண்காணிப்பின் கீழ் பிட் காயின்கள் கொண்டுவரப்படும்
நேர்மையாக வரி செலுத்தும் நபர்களுக்கும் விருதும், பரிசும் வழங்கப்படும்.


நிதி பற்றாக்குறை :
நிதி பற்றாக்குறை 3.3 சதவீதமாக குறையும்
நடப்பாண்டு நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாக உள்ளது.
கடந்த ஆண்டு பட்ஜெட் தொகையை விட நடப்பாண்டில் 3.5 சதவீதம் உயர்வு


வரிச்சலுகை :
தனிநபர் வருமான வரி வருவாய் ரூ.12.6 சதவீதமாக அதிகரிப்பு
ஆண்டுக்கு ரூ.250 கோடிக்கு மேல் வருவாய் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 25 சதவீதம் குறைக்கப்படும்.
வேளாண் உற்பத்தி நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு 100 சதவீத வரிவிலக்கு
தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை. வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாக தொடரும்.
மாத சம்பளதாரர்களுக்கு வருமானவரியில் நிரந்தர கழிவு வசதி மீண்டும் கொண்டு வரப்படும்.
மூத்த குடிமக்களுக்கு வங்கி டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி விலக்கு ரூ.50,000 ஆக உயர்வு
மூத்த குடிமக்களுக்கு எல்.ஐ.சி மூலம் சிறப்பு திட்டம். ஓய்வு ஊதியம் பெறுவோருக்கு 40000 ரூபாய் வரை வட்டி வருமானத்தில் வரி பிடித்தம் இல்லை
மருத்துவ காப்பீடுக்காக செய்யப்படும் செலவில் 50000 ரூபாய் வரை ஓய்வு ஊதியம் பெறுவோருக்கு வரி விலக்கு.
மாத சம்பளதாரர்கள் போக்குவரத்து மற்றும் மருத்துவ செலவுகளில் ரூ.40,000 வரை வருமான வரிச்சலுகை பெற்றுக் கொள்ளலாம்.
விவசாய கூட்டுறவு சங்கங்களுக்கு வரிவிலக்கு

வரி உயர்வு :
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மொபைல்போன் இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் ஆக உயர்வு.
இறக்குமதி செய்யப்படும் டிவி.,க்களுக்கு 15 சதவீதமாக வரி உயர்த்தப்படும்.

கல்விக்கான செஸ் வரி 4 சதவீதமாக உயர்வு  

புதிய வரிகள் :
பங்குகளில் முதலீடு செய்யப்படும் பரஸ்பர நிதி வருவாய்க்கு 10 சதவீதம் வரி

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)