சரக்கு போக்குவரத்தில் புதிய நடைமுறை  துவங்கிய நாளன்றே தடங்கல் ‘இ – வே பில்’ தற்காலிக வாபஸ்சரக்கு போக்குவரத்தில் புதிய நடைமுறை துவங்கிய நாளன்றே தடங்கல் ‘இ – வே ... ...  தொழில்நுட்பம் – வேலைவாய்ப்பு – முதலீடு ஆட்டோமேஷன், கருத்துருவாக்கத்திற்கு மார்க்கெட்டிங் நிறுவனங்கள் முன்னுரிமை தொழில்நுட்பம் – வேலைவாய்ப்பு – முதலீடு ஆட்டோமேஷன், ... ...
ஜி.எஸ்.டி., அறி­வோம் -– தெளி­வோம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2018
02:07

மின் வழிச் சீட்டு என்­றால் என்ன?

மின் வழிச் சீட்டு என்­பது, சரக்­கு­களை எடுத்­துச்செல்­வ­தற்­காக, பொது வலை­த­ளத்­தில்
உரு­வாக்­கம் செய்ய வேண்­டிய ஓர் ஆவ­ண­மா­கும்.

மின் வழிச் சீட்டை உரு­வாக்­கம் செய்­வ­தற்­கான, பொது வலை­த­ளம் எது?

மின் வழிச் சீட்டை உரு­வாக்­கம் செய்­வ­தற்­கான, பொது வலை­த­ளம், http://ewaybill.nic.in ஆகும். இந்த வலை­த­ளத்­தில், தற்­போது, மின் வழிச் சீட்டை உரு­வாக்­கம் செய்து கொள்­ளும் வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. மின் வழிச் சீட்டு அமைப்பு, ewaybillgst.gov.in என்ற வலை­த­ளத்­தி­லும் செயல்­படும்.

எந்த வகை­யான பரி­வர்த்­த­னை­க­ளுக்கு, மின் வழிச் சீட்டு தேவைப்­ப­டு­கிறது?

சரக்­கு­களை எடுத்­துச் செல்­வ­தற்­கான, அனைத்து வகை­யான பரி­வர்த்­த­னை­க­ளுக்­கும், மின் வழிச் சீட்டு அவ­சி­யம். மாநி­லங்­க­ளுக்­கி­டையே அல்­லது ஒரு மாநி­லத்­துக்­குள்ளே நடை­பெ­றும், வெளிப்­புற சரக்கு வழங்­கு­தல், உள்­புற சரக்கு வழங்­கு­தல், பதிவு பெறாத நப­ரி­ட­மி­ருந்து பெறப்­படும் வழங்­கு­தல் உட்­பட அல்­லது வழங்­கு­தல் அல்­லாத வேறு கார­ணங்­க­ளுக்­கா­க­வும் கூட, சரக்­கு­களை எடுத்­துச் செல்­லும் பரி­வர்த்­த­னை­க­ளுக்கு, மின் வழிச் சீட்டு கட்­டா­யம் தேவை.

நுகர்­வோர் பொருட்­களை வாங்கி, அவற்றை தன்­னு­டைய இடத்­திற்கு, அவர்­களே எடுத்­துச் செல்­வ­தற்கு, மின் வழிச் சீட்டு தேவையா?

ஆம், தேவை. விதி­க­ளின்­படி, 50 ஆயி­ரம் ரூபாய்க்கு அதி­க­மான மதிப்­புள்ள சரக்­கு­க­ளுக்கு, மின் வழிச் சீட்டு தேவை.இத்­த­கைய சூழ்­நி­லை­யில், நுகர்­வோர், வரி செலுத்­து­ப­வ­ரி­டமோ அல்­லது சரக்­கு­களை வழங்­கு­ப­வ­ரி­டமோ, அவ­ரது பில் அல்­லது விலைப்­பட்­டி­ய­லின் அடிப்­ப­டை­யில், மின் வழிச் சீட்டை உரு­வாக்­கித் தரும்­படி கேட்டு பெற்­றுக் கொள்­ள­லாம் அல்­லது நுகர்­வோரே, குடி­ம­க­னாக, ‘லாக் இன்’ செய்து, தன் பொருட்­களை எடுத்­துச் செல்­வ­தற்­காக, மின் வழிச் சீட்டை உரு­வாக்­க­லாம்.

சரக்­கு­களை வழங்­கு­ப­வர் அல்­லது சரக்­கு­களை பெறு­ப­வ­ரி­டம், ஜி.எஸ்.டி.ஐ.என்., எண்
இல்­லா­த­ பட்­சத்­தில், அதை குறிப்­பிட வேண்­டிய இடத்தை, எவ்­வாறு பூர்த்தி செய்ய வேண்­டும்?

சரக்­கு­களை வழங்­கு­ப­வர் அல்­லது சரக்­கு­களை பெறு­ப­வ­ரி­டம், ஜி.எஸ்.டி.என்., எண் இல்­லா­த­பட்­சத்­தில், மின் வழிச் சீட்டை உரு­வாக்­கும் போது, அந்த இடத்­தில், யு.ஆர்.பி., (அன்­ரி­ஜிஸ்­டர்டு பெர்­சன்) அதா­வது, பதிவு செய்­யப்­ப­டாத நபர் என, பூர்த்தி செய்ய வேண்­டும்.

எடுத்­துச் செல்­லப்­படும் சரக்­கு­க­ளு­டன், எந்­தெந்த ஆவ­ணங்­களை எடுத்­துச் செல்ல வேண்­டும்?

வரி விலைப்­பட்­டி­யல் அல்­லது வழங்­கு­த­லுக்­கான பில் அல்­லது டெலி­வரி சலான். இவற்­றில் எது பொருத்­தமோ அது மற்­றும் மின் வழிச் சீட்­டின் ஒரு நகல் அல்­லது பொது வலை­த­ளத்­தி­லி­ருந்து உரு­வாக்­கம் செய்­யப்­பட்ட மின் வழிச் சீட்­டின் எண் ஆகி­யவை தேவை.

மின் வழிச் சீட்­டின் பகுதி, ‘பி’யை பூர்த்தி செய்­வது அவ­சி­யமா?

பகுதி, ‘பி’யை பூர்த்தி செய்­தால் தான், மின் வழிச் சீட்டு முழு­மை­ய­டை­யும். சரக்­கு­களை எடுத்­துச் செல்­வ­தற்கு பகுதி, ‘பி’ அவ­சி­யம். அதை பூர்த்தி செய்­யா­விட்­டால், சரக்­கு­களை ஏற்­றிச் செல்­வ­தற்­கான, அச்­ச­டித்த மின் வழிச் சீட்டு செல்­லா­த­தாகி விடும்.

ஒரு மின் வழிச் சீட்­டின் பகுதி, ‘பி’யில், எத்­தனை முறை வாகன எண்ணை புதுப்­பிக்க செய்ய
முடி­யும்?

சரக்கு சென்று சேர வேண்­டிய இடம் வரை, உப­யோ­கிப்­பா­ளர் எத்­தனை முறை வேண்­டு­மா­னா­லும், வாகன எண்ணை, ‘அப்­டேட்’ செய்ய முடி­யும். எனி­னும், மின் வழிச் சீட்டு செல்­லு­படி ஆகும் காலம் வரை மட்­டுமே புதுப்­பிக்க முடி­யும்.

யாரெல்­லாம், மின் வழிச் சீட்­டில் வாகன எண்ணை, ‘அப்­டேட்’ செய்ய வேண்­டும்?

சரக்­கு­களை எடுத்­துச் செல்­லும் வாகன எண்ணை, பொது வலை­த­ளத்­தில், ‘அப்­டேட்’ செய்­யா­விட்­டால், மின் வழிச் சீட்டு செல்­லு­ப­டி­யா­காது. மின் வழிச் சீட்டை உரு­வாக்­கம் செய்­ப­வர் அல்­லது அவ­ரால் அந்த மின் வழிச் சீட்­டிற்­காக ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட, போக்­கு­வ­ரத்து நிறு­வன நபர், வாகன எண்ணை பதி­வி­ட­லாம் அல்­லது புதுப்­பிக்­க­லாம்.


– ஜி.எஸ்.டி., முதன்மை கமி­ஷ­னர் மற்­றும் கலால் துறை­யின் சென்னை பிரிவு வெளி­யீடு. இந்த தக­வல், பொது­வான கண்­ணோட்­டத்­தில் வழங்­கப்­ப­டு­வ­தால், இது, சட்ட ஆலோ­ச­னை­யாக அல்­லது கருத்­தாக கரு­தப்­ப­டாது.

(அடுத்த ஞாயிறு சந்­திப்­போம்)

ஜி.எஸ்.டி., குறித்த சந்தேகங்களுக்கு, கீழ்கண்ட முகவரியில் செயல்படும், ஜி.எஸ்.டி., சேவை மையங்களை அணுகி விளக்கம் பெறலாம்.
1. முதன்மை கமிஷனர், ஜி.எஸ்.டி., & மத்திய கலால் வரி அலுவலகம் – நுங்கம்பாக்கம், சென்னை.
தொலைபேசி: ௦௪௪ – ௨௮௩௩ ௧௦௦௯. மின்னஞ்சல்: gstsevakchn@gmail.com
௨. உதவி கமிஷனர் அலுவலகம் – தேனாம்பேட்டை, சென்னை, தொலைபேசி: ௦௪௪ – ௨௪௩௨ ௧௯௯௪. மின்னஞ்சல்: tvtrdivision@gmail.com
3. உதவி கமிஷனர் அலுவலகம் – அம்பத்துார், சென்னை, தொலைபேசி: ௦௪௪ – ௨624 2744. மின்னஞ்சல்: ambattur37@gmail.com
௪. உதவி கமிஷனர் அலுவலகம் – அண்ணா நகர், சென்னை, தொலைபேசி: ௦௪௪ – ௨௬௧௪ ௨௮௫௧. மின்னஞ்சல்: gstnorthnewry@gmail.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)