ஜி.எஸ்.டி.,  அறி­வோம் -– தெளி­வோம்ஜி.எஸ்.டி., அறி­வோம் -– தெளி­வோம் ... மத்­திய பட்ஜெட்; வரி சேமிக்கும் வழிகள் மத்­திய பட்ஜெட்; வரி சேமிக்கும் வழிகள் ...
தொழில்நுட்பம் – வேலைவாய்ப்பு – முதலீடு ஆட்டோமேஷன், கருத்துருவாக்கத்திற்கு மார்க்கெட்டிங் நிறுவனங்கள் முன்னுரிமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2018
02:11

மும்பை:‘நடப்­பாண்டு, மார்க்­கெட்­டிங் நிறு­வ­னங்­கள், ஆட்­டோ­ மே­ஷன், கருத்­து­ரு­
வாக்­கம் மற்­றும் வீடியோ தொழில்­நுட்­பங்­க­ளுக்கு, அதிக முன்­னு­ரிமை அளிக்­கும்’ என,
ஆய்­வொன்­றில் தெரியவந்­துள்­ளது.

‘லிங்டுஇன் இந்­தியா’ நிறு­வ­னம், இந்­தியா, ஆஸ்­தி­ரே­லியா, சிங்­கப்­பூர் மற்­றும் ஹாங்­காங் நாடு­க­ளைச் சேர்ந்த, 779 மார்க்­கெட்­டிங் நிறு­வ­னங்­களின் செயல் திட்­டங்­கள் குறித்து ஆய்வு செய்து, ‘நாளைய மார்க்­கெட்­டிங் குழு’ என்ற ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்டு உள்­ளது.

அதன் விப­ரம்:

இந்­தாண்டு, மார்க்­கெட்­டிங் நிறு­வ­னங்­களின் செயல் திட்­டங்­கள் அனைத்­தும், தொழில்­நுட்­பங்­களின் அடிப்­ப­டை­யில் அமை­யும். மார்க்­கெட்­டிங் குழுக்­கள், வெளி­யில் இருந்து, திறமை வாய்ந்த தொழில்­நுட்ப வல்­லு­னர்­களின் ஆற்­றலை பயன்­ப­டுத்­திக் கொள்­ளும். அதே சம­யம், நிறு­வனபணி­யா­ளர்­கள் மூலம், வாடிக்­கை­யா­ளர் சேவையை மேம்­ப­டுத்­து­வ­தி­லும்
கவ­னம் செலுத்­தும்.

நிறு­வ­னங்­கள், உயர் தர­மான, ‘பிராண்டு’ கருத்­து­ரு­வாக்­கத்தை, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கும். தலை­சி­றந்த கருத்­து­ரு­வாக்­கம் மூலம், வாடிக்­கை­யா­ள­ரின் நம்­பிக்கை மற்­றும் விசு­வா­சத்தை சம்­பா­திக்­கத் தலைப்­படும்.இந்­தி­யா­வில், ஆய்­வில்பங்­கேற்ற நிறு­வ­னங்­களில், 97 சத­வீ­தம், அவற்­றின் மார்க்­கெட்­டிங் குழுக்­களை விரி­வாக்­கம் செய்ய உள்­ள­தாக தெரி­வித்து உள்ளன.

இவை, தன்­னம்­பிக்கை, வசீ­க­ரிக்­கும் பேச்­சாற்­றல் உள்­ளிட்ட மென்­தி­றன்­களில், சிறந்து விளங்­கு­வோரை பணிக்கு அமர்த்த திட்­ட­மிட்டு உள்ளன.பிரச்­னை­க­ளுக்கு உட­ன­டி­யாக தீர்வு காண்­பது, கொள்கை திட்­டங்­களை வகுப்­பது போன்ற, அறி­வுத் திற­னில் சிறந்து விளங்­கு­வோரை பணிக்கு அமர்த்த உள்­ள­தாக, 88 சத­வீத நிறு­வ­னங்­கள் கூறி­யுள்ளன.

கணக்­கி­யல், நேர மேலாண்மை, நல்­லு­றவு வளர்க்­கும் ஆற்­றல் உள்­ளோ­ருக்கு வேலை­வாய்ப்பு வழங்க, 89 சத­வீத நிறு­வ­னங்­கள் திட்­ட­மிட்டு உள்ளன.இந்­தாண்டு, இந்­திய
மார்க்­கெட்­டிங் நிறு­வ­னங்­கள்,அவற்­றின் நிதி ஒதுக்­கீட்டை, 74 சத­வீ­தம் அதி­க­ரிக்க
உள்­ள­தாக கூறி­யுள்ளன.

இது, ஆஸ்­தி­ரே­லியா, 19 சத­வீ­தம்; சிங்­கப்­பூர், 25 சத­வீ­தம்; ஹாங்­காங், 33 சத­வீ­தம் ஆகி­ய­வற்றை விட அதி­க­மா­கும்.இந்­நி­று­வ­னங்­களின் முத­லீ­டு­களில், ‘ஆட்­டோ­மே­ஷன்’ எனப்­படும், தன்­னிச்­சை­யான செயல்­பா­டு­க­ளுக்­கான சாப்ட்­வேர் பயன்­பாடு, வீடியோ கருத்­துரு மற்­றும் சந்­தை­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக் கூடிய அம்­சங்­கள் முன்­னிலை வகிக்­கின்றன.

மேலும், தரவு ஆய்­வு­கள், இயந்­திர கல்­வி­யி­யல், தன்­னிச்­சை­யாக விளம்­ப­ரங்­களை ஈர்க்­கும் தொழில்­நுட்­பம் ஆகிய மூன்று தொழில்­நுட்­பங்­க­ளுக்கு, முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என, மார்க்­கெட்­டிங் நிறு­வ­னங்­கள் தெரி­வித்­துள்ளன.இத்­து­டன், வாடிக்­கை­யா­ளரை ஈர்ப்­பது மற்­றும் தக்க வைத்­துக் கொள்­வ­தில் கவ­னம் செலுத்த உள்­ள­தாக, முறையே, 92 மற்­றும் 83 சத­வீத
நிறு­வ­னங்­கள் கூறி­யுள்ளன.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

புதுயுகம்

சிறந்த கருத்­து­ரு­வாக்­கத்­து­டன் கூடிய விளம்­பர முறை தான், இன்­றைய மார்க்­கெட்­டிங் துறை­யின் மையப்­புள்­ளி­யாக உள்­ளது. தக­வல்­களும், கருத்­து­ரு­வாக்­க­மும் வீடியோ வடி­வில் வழங்­கப்­ப­டு­கின்றன. இது போன்ற புது­யுக மார்க்­கெட்­டிங் முறை­யில், இந்­திய நிறு­வ­னங்­க­ளுக்கு தற்­போது பரிட்­ச­யம் ஏற்­பட்­டுள்­ளது.

விர்ஜினியா சர்மா

இயக்குனர், மார்க்கெட்டிங் சொல்யூஷன்ஸ் பிரிவு,

லிங்டுஇன் இந்தியா

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)