பதிவு செய்த நாள்
08 பிப்2018
02:31

புதுடில்லி : ‘‘குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின், வாராக்கடன் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான கொள்கை திட்டம், விரைவில் அறிவிக்கப்படும்,’’ என, மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர், கிரிராஜ் சிங் தெரிவித்து உள்ளார்.மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, சமீபத்திய பட்ஜெட் உரையில், ‘குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடன், இடர்ப்பாட்டு கடன் ஆகியவற்றுக்கு, தீர்வு காண்பதற்கான கொள்கை திட்டம், விரைவில் அறிவிக்கப்படும்.‘இதன் மூலம், இந்நிறுவனங்கள் நிதி நெருக்கடி சவால்களை, சுலபமாக சமாளித்து, வளர்ச்சி காண முடியும்’ என, தெரிவித்துஇருந்தார்.அதன்படி, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின், வாராக்கடன் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை வடிவமைப்பது தொடர்பாக, நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.‘‘அடுத்த மாதத்திற்குள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின், வாராக்கடன் தீர்வு கொள்கை திட்டம் வெளியாகும்,’’ என, அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்து உள்ளார்.பிரதமர் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில், வலைதளம் வாயிலாக, வங்கி கடன் வழங்கும் நடைமுறை சோதித்து பார்க்கப்பட்டது. இத்திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கும், வலைதளம் மூலம் வங்கி கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.‘‘வலைதளம் வாயிலாக கடன் வழங்கும் திட்டம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த வெளிப்படைத் தன்மைக்கு வழிவகுக்கும் என்பதால், வங்கிகள் தாராளமாக கடன் வழங்க முன்வரும். அதனால், கடனுக்கான வட்டி விகிதம் குறையும்,’’ என, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு துறை கமிஷனர், ராம் மோகன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.‘‘ஒட்டுமொத்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு, தற்போதைய நிலவரப்படி, 1.30 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த தொகை, கடன் உத்தரவாத நிதியத்தின் மூலதன வரம்பு, 2,500 கோடி ரூபாயாக இருந்த போது வழங்கப்பட்டது.‘‘இந்த வரம்பு, தற்போது, 8,000 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதனால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, வங்கிகள், நெருக்கடி ஏதுமின்றி, மேலும் ஆர்வத்துடன் கடன் வழங்கும்,’’ என, மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை செயலர், அருண் குமார் பாண்டா தெரிவித்து உள்ளார்.‘‘விரைவில் வெளியாக உள்ள, மத்திய அரசின் கடன் தீர்வு கொள்கை திட்டம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேலும் சிறப்பாக வளர்ச்சி காண்பதற்கு துணை புரியும்,’’ என, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|