பதிவு செய்த நாள்
08 பிப்2018
02:31

கோல்கட்டா : ‘நாட்டின் தேயிலை ஏற்றுமதி, 2017ல், 240.7௦ மில்லியன் கிலோவாக அதிகரித்துள்ளது’ என, தேயிலை வாரியம் தெரிவித்து உள்ளது.இது குறித்து, தேயிலை வாரியம் வெளியிட்டு உள்ள அறிக்கை:நாட்டின் தேயிலை ஏற்றுமதி, 36 ஆண்டுகளுக்கு பின், 2017ல், 240 மில்லியன் கிலோவை தாண்டி, 240.70 கிலோவாக உயர்ந்துள்ளது. இதற்கு முன், 1981ல், அதிகபட்சமாக, 241.25 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதியானது.கடந்த, 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், மதிப்பீட்டு ஆண்டில், தேயிலை ஏற்றுமதி, 8.20 சதவீதம் அதிகரித்து, 18.23 மில்லியன் கிலோ என்ற அளவில் உயர்ந்துள்ளது; ஏற்றுமதி மதிப்பு, 5.90 சதவீதம் ஏற்றம் கண்டு, 4,731.66 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.ஏற்றுமதியில், வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவின் பங்களிப்பு, முறையே, 148.41 மில்லியன் கிலோ மற்றும் 92.27 மில்லியன் கிலோவாக உள்ளது.டாலர் அடிப்படையில், 2017ல் தேயிலை ஏற்றுமதி மதிப்பு, 9.26 சதவீதம் அதிகரித்து, 726.76 டாலராக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|