பதிவு செய்த நாள்
08 பிப்2018
02:31

புதுடில்லி : நீர் விளையாட்டுகளுக்கான பூங்கா, ‘தீம் பார்க்’ உள்ளிட்ட பொழுதுபோக்கு பூங்காக்களின் நுழைவுக் கட்டணத்திற்கான, ஜி.எஸ்.டி., 28 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:சமூக ஆரோக்கியத்திற்கும், குழந்தைகளுடன், குடும்பத்தினர் குதுாகலமான விளையாட்டுகளில் ஈடுபட உதவும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு, வரியை குறைக்க வேண்டும் என, கோரிக்கைகள் வந்தன. அதை ஏற்று, வரி, 18 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இது, ஜன., 25 முதல் அமலுக்கு வந்துள்ளது.இத்துடன், சர்க்கஸ், நடனம், நாடகம், இசை, விருது வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு, 500 ரூபாய் வரையிலான, ஒரு டிக்கெட் கட்டணத்திற்கு, ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்க்குள் விற்றுமுதலை கொண்ட, குடியிருப்போர் நலச் சங்கத்திற்கு, அதன் உறுப்பினர்கள் செலுத்தும் மாத சந்தாவுக்கான, ஜி.எஸ்.டி., வரம்பு, 5,000 ரூபாயில் இருந்து, 7,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|