பதிவு செய்த நாள்
08 பிப்2018
02:32

மும்பை : ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்டுள்ள நிதிக் கொள்கையில், ‘வங்கிகளுக்கு வழங்கும், குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதம், 6 சதவீதமாக நீடிக்கும்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு டிசம்பரில், சில்லரை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் இலக்கை மீறி, 5.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத்துடன், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றால், பணவீக்கம் மேலும் உயரும் என்ற கணிப்பில், ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ விகிதங்களில் மாற்றம் ஏதும் செய்யவில்லை.அறிக்கையில் இதர முக்கிய அம்சங்கள்: ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அளிக்கும், கடனுக்கான, ‘ரிவெர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதம், 5.75 சதவீதமாக நீடிக்கும் சில்லரை பணவீக்கம், நடப்பு ஜன., – மார்ச் காலாண்டில், 5.1 சதவீதம்; ஏப்., – செப்., அரையாண்டில், 5.1 – -5.6 சதவீதம் ஆக இருக்கும் வரும், 2018- – 19ம் நிதியாண்டில், அக்., – மார்ச் வரையிலான அரையாண்டில், சில்லரை பணவீக்கம் 4.5 – 4.6 சதவீதமாக குறையும் மொத்த மதிப்பு கூட்டல் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 6.6 சதவீதம்; வரும் நிதியாண்டில், 7.2 சதவீதமாக இருக்கும் ஜி.எஸ்.டி., நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முதலீடுகள் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தோன்றி உள்ளன மறு பங்கு மூலதன திட்டம், நிறுவன திவால் சட்டம் ஆகியவற்றால், வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரிக்கும் உலகளவில் தேவை பெருகி வருவதால், ஏற்றுமதி மேம்படும் மத்திய பட்ஜெட்டில், ஊரக மற்றும் உட்கட்டமைப்பு துறைகளுக்கு அளித்துள்ள முக்கியத்துவம் வரவேற்கத்தக்கதுஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக் கொள்கை, ஏப்., 5ல் வெளியாகும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|