பதிவு செய்த நாள்
08 பிப்2018
10:29

புதுடில்லி : ஹோன்டா நிறுவனத்தின் ஆக்டிவா 5ஜி ஆட்டோ எக்ஸ்போ 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய நிறங்களில், எல்இடி ஹெட்லைட் மற்றும் பல்வேறு புதிய அம்சங்களுடன் புதிய ஆக்டிவா 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஹோன்டா ஸ்கூட்டரில் 109.19சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர், 7500 ஆர்.பி.எம். மற்றும் 9 என்.எம். டார்கியூ 5500 ஆர்,பி,எம். செயல்திறன் மற்றும் சிவிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. ஹோன்டா ஆக்டிவா 5ஜி மாடலில் 5.3 லிட்டர் ஃபியூயல் டேன்க் மற்றும் 108 கிலோ எடை கொண்டிருக்கிறது.
அளவில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படாத ஹோன்டா ஆக்டிவா 1761 மில்லிமீட்டர் நீளமாகவும், 710 மில்லிமீட்டர் அகலமாகவும் இருக்கிறது. இதன் வீல்பேஸ் 1238 மில்லமீட்டர் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 153 மில்லிமீட்டரில் தரையில் இருந்து 765 மில்லிமீட்டர் உயரத்தில் இருக்கிறது. ஆக்டிவா 5ஜி மாடலில் 10 இன்ச் வீல் மற்றும் 90/100 டையர்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 130 மில்லிமீட்டர் டிரம் பிரேக் மற்றும் ஹோன்டாவின் காம்பி பிரேக் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும் போது புதிய ஸ்கூட்டரில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் புதிய எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் பொசிஷன் லைட்கள் 1100சிசி ஸ்கூட்டர் பிரிவில் இந்திய சந்தைக்கு புதுவரவு அம்சங்களாக பார்க்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்த வரை குரோம் ஹெட்லைட், மெட்டல் மஃப்ளர் ப்ரோஜெக்டர், டேசல் எல்லோ மெட்டாலிக் மற்றும் பியர்ல் ஸ்பார்டன் ரெட் என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹோன்டா 5ஜி மாடலின் டீலக்ஸ் வேரியண்ட் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப் யூனிட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வரும் மாதங்களில் விற்பனைக்கு வரயிருக்கும் புதிய ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் இந்தியாவில் டி.வி.எஸ். ஜூப்பிட்டர், வீகோய யமஹா ரே இசட் மற்றும் ஃபேசினோ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|