பதிவு செய்த நாள்
08 பிப்2018
15:05

மும்பை : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ரூ.1500 என்ற மிகக் குறைந்த விலையில் 4ஜி ஃபியுச்சர் போனை அறிமுக செய்துள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்களை கவருவதற்காக மாதத்திற்கு ரூ.49 என்ற கட்டணத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டா சேவை வழங்கி வருகிறது.
ஜியோவுக்கு போட்டியாக பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலர் ஆகிய 3 தொலைத்தொடர்பு நிறுவனங்களும், மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு, ஜியோவை விட மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை வழங்க திட்டமிட்டுள்ளன. அதன்படி ரூ.500 க்கு 4ஜி ஸ்மார்ட்போனை வழங்க திட்டமிட்டுள்ளன. அத்துடன் ரூ.60 முதல் 70 என்ற கட்டணத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டா சேவைகளை வழங்கும் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளன. ஜியோ நிறுவனத்தின் 2ஜி வாய்ஸ் சேவையை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை கவருவதற்காக இந்த புதிய சலுகை திட்டத்தை அறிமுகம் செய்ய இந்நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த புதிய திட்டம் குறித்து பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் பதில் தர மறுத்து விட்டன. இருப்பினும் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இந்த அதிரடி குறைந்த விலையில் ஸ்மார்ட்போன், டேட்டா பிளான் போன்ற திட்டங்களால் ஸ்மார்ட்போன்களின் விலை வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|