பதிவு செய்த நாள்
08 பிப்2018
15:59

மும்பை : ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட உயர்வின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று (பிப்.,08) நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. வர்த்தக நேர துவக்கத்தின் போது சிறிய அளவில் உயர்வுடன் காணப்பட்டாலும், 10.30 மணியளவில் சென்செக்ஸ் அதிரடியாக 250 புள்ளிகள் வரை உயர்ந்தது.
முக்கிய நிறுவனங்கள் பலவும் தங்களின் காலாண்டு நிகரலாபம் ஏற்றமடைந்திருப்பதாக வெளியிட்டதாகலும், பிற்பகல் வர்த்தகத்தின் போத வங்கிகள் மற்றும் நிதித்துறை நிறுவனங்கள், தொழில்நுட்பத்துறை பங்குகள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள், சிமெண்ட், மருந்து துறை பங்குகள் உயர்வடைந்ததாலும் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 330.45 புள்ளிகள் உயர்ந்து 34,413.16 புள்ளிகளாகவும், நிப்டி 100.20 புள்ளிகள் உயர்ந்து 10,576.90 புள்ளிகளாகவும் இருந்தன. நிப்டி உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த போதிலும் மீண்டும் 10,600 புள்ளிகளை எட்ட தவறவிட்டது, முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைய செய்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|