பதிவு செய்த நாள்
08 பிப்2018
21:08

புதுடில்லி : சர்வதேச அளவில், 50 நாடுகளின் அறிவுசார் சொத்துரிமை குறியீட்டில், இந்தியா, 44வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
கடந்த ஆண்டு, 45 நாடுகளில், 8.4 புள்ளிகளுடன், இந்தியா, 43வது இடத்தில் இருந்தது.இது குறித்து, அமெரிக்க வர்த்தகக் கூட்டமைப்பின், சர்வதேச கண்டுபிடிப்பு கொள்கை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில், கணினி சார்ந்த கண்டுபிடிப்புகளின் தேர்வு விதிமுறைகள், 2017ல் வெளியிடப்பட்டன.இது, தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு, சுலபமாக காப்புரிமை பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தி உள்ளது.
இத்துடன், அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. மத்திய அரசின், விழிப்புணர்வு பயிற்சி பட்டறைகளும், தொழில்நுட்ப பயிற்சிகளும், அமலாக்க அதிகாரிகளுக்கான பயிற்சி திட்டங்களும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு காரணங்கள் எனலாம்.எனினும், அறிவுசார் சொத்துரிமை செயலாக்கத்தில், இந்தியா இன்னும் பலவீனமாகவே உள்ளது.
குறிப்பாக, வாழ்வியல் அறிவியல் துறையில், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு அம்சங்கள் வலிமையாக இல்லை.சர்வதேச அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தங்களில், இந்தியாவின் பங்கேற்பும் குறைவாகவே உள்ளது. இது போன்ற அம்சங்களால், வளர்ந்த நாடுகளை போல, இத்துறையில் இந்தியா பூரணத்துவம் பெற, நீண்ட காலம் ஆகும். அதற்கு, உள்நாட்டு கண்டுபிடிப்புகளுக்கு, ஊக்குவிப்பு சலுகைகள் வழங்க வேண்டும்; அன்னிய முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும். கண்டுபிடிப்புகளில் இறங்குவதற்கான வழிமுறைகளை, மேலும் சுலபமாக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா முதலிடம்:
அறிவுசார் சொத்துரிமை குறியீட்டில், முதலிடத்தில் அமெரிக்காவும், அடுத்த இடங்களில், பிரிட்டன், சுவீடன் ஆகியவையும் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|