பதிவு செய்த நாள்
08 பிப்2018
21:11

புதுடில்லி : டில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை, அவற்றின் ஆண்டு விற்றுமுதல் அடிப்படையில் வகைப்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
தற்போது, தயாரிப்பு நிறுவனங்கள், அவற்றின் ஆலை மற்றும் இயந்திரங்களில் செய்த முதலீட்டின்படி, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. அது போல, சேவை நிறுவனங்கள், சாதனங்களில் செய்துள்ள முதலீடுகளின்படி பிரிக்கப்படுகின்றன.இனி, ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய் வரை விற்றுமுதல் உள்ள நிறுவனங்கள், குறு நிறுவனங்களாக கருதப்படும்.
ஐந்து கோடி ரூபாய்க்கு மேல், 75 கோடி ரூபாய் வரை, விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள் என்ற பிரிவில் சேர்க்கப்படும். நடுத்தர நிறுவனங்களுக்கு, ஆண்டு விற்றுமுதல், 75 – 250 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஜி.எஸ்.டி., நடைமுறையை சுலபமாக பின்பற்ற, இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின், இந்த மாற்றம் அமலுக்கு வரும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|