நேரடி வரி வசூல் 19.3 சதவீதம் அதிகரிப்புநேரடி வரி வசூல் 19.3 சதவீதம் அதிகரிப்பு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.25 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.25 ...
ஜி.எஸ்.டி., அறி­வோம் -– தெளி­வோம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2018
07:43

மின் வழிச் சீட்­டில், பிழை அல்­லது தவ­றான பதிவு இருந்­தால், திருத்­தமோ அல்­லது
மாற்­றமோ செய்ய முடி­யுமா?


மின் வழிச் சீட்டு உரு­வாக்­கப்­பட்டு விட்­டால், அதில் திருத்­தமோ அல்­லது மாற்­றமோ செய்ய முடி­யாது. பகுதி, ‘பி’-யை மட்­டுமே, ‘அப்­டேட்’ செய்ய முடி­யும். எனி­னும், மின் வழிச் சீட்டு தவ­றான தக­வ­லு­டன் உரு­வாக்­கப்­பட்டு விட்­டால், 24 மணி நேரத்­திற்­குள், அதை ரத்து செய்து, மீண்­டும் புதி­தாக உரு­வாக்­க­லாம்.

மின் வழிச் சீட்டை நீக்­கவோ, ரத்து செய்­யவோ முடி­யுமா? முடி­யும் என்­றால், எந்த சூழ்­நி­லை­களில் செய்­ய­லாம்?


உரு­வாக்­கம் செய்த பின், மின் வழிச் சீட்டை நீக்க இய­லாது. ஆனால், அதை உரு­வாக்­கம் செய்த, 24 மணி நேரத்­திற்­குள், உரு­வாக்­கம் செய்­த­வர், பொது வலை­த­ளத்­திற்கு சென்று, மின் வழிச் சீட்டை ரத்து செய்ய முடி­யும்.

அதி­கா­ரம் அளிக்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரி­யால், சோதனை செய்­யப்­பட்டு விட்­டது என்­றால், மின் வழிச் சீட்டை ரத்து செய்ய இய­லாது. சரக்­கு­கள் எடுத்­துச் செல்­லப்­ப­டா­விட்­டால் அல்­லது மின் வழிச் சீட்­டில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள விப­ரங்­க­ளின்­படி, எடுத்­துச் செல்­லப்­ப­டா­விட்­டால், பொது வலை­த­ளத்­தி­லேயே, மின் வழிச் சீட்டை ரத்து செய்ய முடி­யும்.

தொகுக்­கப்­பட்ட மின் வழிச் சீட்டு என்­றால் என்ன?


தொகுக்­கப்­பட்ட மின் வழிச் சீட்டு என்­பது, ஒரு சரக்கு வாக­னத்­தில் எடுத்­துச் செல்­லப்­படும், பல வகை­யான சரக்கு ஒப்­ப­டைப்­பு­க­ளுக்­கான, மின் வழிச் சீட்­டு­களை கொண்ட, ஓர் ஆவ­ணம். அதா­வது, வெவ்­வேறு சரக்கு அனுப்­பு­ப­வர்­கள் மற்­றும் சரக்கு பெறு­ப­வர்­களின் சரக்கை, ஒரு வாக­னத்­தில் எடுத்­துச் செல்­லும் போது, தனித்­த­னி­யான மின் வழிச் சீட்­டு­க­ளுக்கு பதி­லாக, அனைத்­தும் தொகுக்­கப்­பட்ட, ஒரு மின் வழிச் சீட்டை எடுத்­துச் செல்­வ­தா­கும்.

தொகுக்­கப்­பட்ட மின் வழிச் சீட்டை, யார் உரு­வாக்­கம் செய்­ய­லாம்?

பல்­வேறு சரக்கு ஒப்­ப­டைப்­பு­களை, ஒரு வாக­னத்­தில் எடுத்­துச் செல்­வ­தற்­காக, சரக்கை எடுத்­துச் செல்­ப­வர், மின் வழிச் சீட்டை உரு­வாக்­கம் செய்­ய­லாம்.

மின் வழிச் சீட்டு, குறிப்­பிட்ட கால அள­விற்கு மட்­டுமே செல்­லு­ப­டி­யா­கும் என்ற வரை­யறை ஏதும் உள்­ளதா?


ஆம். ஒரு மின் வழிச் சீட்டு அல்­லது தொகுக்­கப்­பட்ட மின் வழிச் சீட்டு, எந்த கால அள­விற்கு செல்­லு­ப­டி­யா­கும் என்­பது, சரக்­கு­கள் எடுத்­துச் செல்­லப்­பட வேண்­டிய தொலைவை பொறுத்து அமை­யும். மின் வழிச் சீட்டை உரு­வாக்­கும் போது, அதன் செல்­லு­படி நிலை தோரா­ய­மான தொலைவை அடிப்­ப­டை­யாக வைத்து நிர்­ண­யிக்­கப்­ப­டு­கிறது.

செல்­லு­ப­டி­யா­கும் காலம், 100 கி.மீ., தொலை­வுக்கு ஒரு நாள். அதன்­பின், ஒவ்­வொரு, 100 கி.மீ., தொலை­வுக்கோ, அதன் ஒரு பகு­திக்கோ, ஒரு கூடு­தல் நாள் செல்­லு­ப­டி­யா­கும். எடுத்­துக்­காட்­டாக, உத்­தேச துாரம், 310 கி.மீ., என்­றால், செல்­லு­ப­டி­யா­கும் காலம், 3 + 1 = நான்கு நாட்­கள்.

மின் வழிச் சீட்­டின் செல்­லு­படி காலம் முடிந்து விட்­டால், என்ன செய்ய வேண்­டும்?

மின் வழிச் சீட்­டின் செல்­லு­படி காலம் முடிந்து விட்­டால், சரக்கை வெளி­யேற்­றக் கூடாது. எனி­னும், அசா­தா­ர­ண­மான சூழ்­நி­லை­யில், செல்­லு­படி காலத்தை, கமி­ஷ­னர் நீடிக்­க­லாம். இதற்­கான வழி­மு­றை­கள், பின் அறி­விக்­கப்­படும்.

மின் வழிச் சீட்­டின் நம்­ப­கத்­தன்­மை­யை­யும், உண்­மை­யை­யும் ஒரு­வ­ரால் சரி பார்க்க
முடி­யுமா?


பொது வலை­த­ளத்­தில், தேடல் செய்­வ­தற்­கான பகு­தி­யில், மின் வழிச் சீட்டு எண், மின் வழிச் சீட்டு தேதி, உரு­வாக்­கி­ய­வ­ரின் அடை­யாள அட்டை மற்­றும் ஆவண எண் ஆகி­ய­வற்றை பூர்த்தி செய்­தால், எவ­ரும் மின் வழிச் சீட்­டின் நம்­ப­கத்­தன்­மை­யை­யும், உண்­மை­யை­யும் சரி பார்க்­க­லாம்.

வரி செலுத்­து­ப­வர் மின் வழிச் சீட்டை உரு­வாக்க, குறுஞ்­செய்தி வச­தியை எவ்­வாறு பயன்­ப­டுத்­த­லாம்?

வரி செலுத்­து­ப­வர், எந்த மொபைல் போன் எண்­ணின் மூலம் மின் வழிச் சீட்டை உரு­வாக்­கம் செய்ய விரும்­பு­கி­றாரோ, அந்த எண்ணை, பொது வலை­த­ளத்­தில் உள்ள, மின் வழிச் சீட்டு அமைப்­பில் பதிவு செய்ய வேண்­டும்.

– ஜி.எஸ்.டி., முதன்மை கமி­ஷ­னர் மற்­றும் கலால் துறை­யின் சென்னை பிரிவு வெளி­யீடு. இந்த தக­வல், பொது­வான கண்­ணோட்­டத்­தில் வழங்­கப்­ப­டு­வ­தால், இது, சட்ட ஆலோ­ச­னை­யாக அல்­லது கருத்­தாக கரு­தப்­ப­டாது.

(அடுத்த ஞாயிறு சந்­திப்­போம்)

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
சேலம்:சர்க்கரை விலை, குவிண்டாலுக்கு, 200 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.நடப்பு, 2018 – 19ல், சர்க்கரை உற்பத்திக்கு, 30.7 ... மேலும்
business news
திருப்பூர்:குறு, சிறு நிறுவனங்களுக்கான சலுகை திட்டங்கள் மீண்டும் தொடர, மத்திய அமைச்சரவை ஒப்புதல் ... மேலும்
business news
சென்னை : தங்கம் விலை இன்று(பிப்., 15) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.224 உயர்ந்துள்ளது.சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில், ... மேலும்
business news
புதுடில்லி:பணியாளர்களின் அலட்சியம் காரணமாகவே, நிறுவனங்களின் கணினி ஒருங்கிணைப்பில் அத்துமீறி நுழைந்து, ... மேலும்
business news
புதுடில்லி:கடும் நிதி நெருக்கடியில் உள்ள, ‘ஜெர் ஏர்வேஸ்’ நிறுவனத்தின், கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு, அதன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)