8.8 கோடி மொபைல் போன்கள் 3 மாதங்களில் இறக்குமதி8.8 கோடி மொபைல் போன்கள் 3 மாதங்களில் இறக்குமதி ...  வரி ஏய்ப்பை தடுப்பதில் தீவிரம் வரும் நிதியாண்டு ஜி.எஸ்.டி., வருவாய் மாதம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் வரி ஏய்ப்பை தடுப்பதில் தீவிரம் வரும் நிதியாண்டு ஜி.எஸ்.டி., வருவாய் மாதம் ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பணவீக்கம், பருவ மழையால் ‘ரெப்போ’ வட்டி குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2018
00:37

புதுடில்லி:‘பண­வீக்­கம் குறைந்து, பருவ மழை நன்கு இருக்­கும்­பட்­சத்­தில், ஆகஸ்­டில், ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டி விகி­தத்தை, 0.25 சத­வீ­தம் குறைக்க வாய்ப்பு உள்­ளது’ என, பேங்க் ஆப் அமெ­ரிக்கா மெரில் லிஞ்ச் தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து, இவ்­வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்கை:

கடந்த ஆண்டு டிசம்­ப­ரில், 5.21 சத­வீ­த­மாக இருந்த சில்­லரை பண­வீக்­கம், இந்­தாண்டு ஜன­வ­ரி­யில், 5.07 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.வெங்­கா­யம், தக்­காளி ஆகி­ய­வற்­றின் விலை குறை­வால், நடப்பு பிப்ர­வ­ரி­யில், சில்­லரை பண­வீக்­கம் மேலும் குறைந்து, 4.7 சத­வீ­த­மாக சரி­யும் என, தெரி­கிறது. ஏப்., – ஜூன் காலாண்­டில், சில்­லரை பண­வீக்­கம், 5.4 சத­வீ­த­மாக இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டுள்­ளது.

இத்­து­டன், ‘லா நினோ’ தாக்­கத்­தால், தென் மேற்கு பருவ மழை நன்கு பொழிந்­தால், ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்கை குழு, ஆகஸ்­டில், வங்­கி­க­ளுக்கு வழங்­கும், குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகி­தத்தை, 0.25 சத­வீ­தம் குறைக்க வாய்ப்பு உள்­ளது.

வரும், 2018 -– 19ம் நிதி­யாண்­டில், சில்­லரை பண­வீக்­கம், 4.8 சத­வீ­த­மாக இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.ரிசர்வ் வங்கி, சில்­லரை பண­வீக்க வரம்பை, 2 – -6 சத­வீ­த­மாக நிர்­ண­யித்து உள்­ளது. இந்த வரம்­பிற்­குள், சில்­லரை பண­வீக்­கம் இருக்­கும் என்­ப­தால், ரெப்போ வட்டி, 6 சத­வீ­தத்­தில் இருந்து, 5.75 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட வாய்ப்பு உள்­ளது.

மத்­திய பட்­ஜெட்­டில், விவ­சா­யி­களின் உற்­பத்­திச் செலவை விட, ஒன்­றரை மடங்கு அதிக விலை­யில், வேளாண் பொருட்­கள் கொள்­மு­தல் செய்­யப்­படும் என, தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.
ஏற்­க­னவே, பல பொருட்­களின் கொள்­மு­தல் விலை, மொத்த விலையை விட அதி­கம் உள்­ளது. அத­னால், பண­வீக்­கத்­தில் தாக்கம் இருக்­காது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)