பதிவு செய்த நாள்
15 பிப்2018
15:38

புதுடில்லி : எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் பணவீக்கம் சரிவடைந்ததை அடுத்து ஜனவரி மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு 2.84 சதவீதம் சரிவடைந்துள்ளது.
2017 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 4.26 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 3.58 சதவீதமாக குறைந்தது. இது இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மேலும் குறைந்து 2.84 சதவீதமாகி உள்ளது. டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 56.46 சதவீதமாக இருந்த காய்கறிகளின் பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 40.77 சதவீதமாக குறைந்துள்ளது.
ஜனவரி மாதத்தில் புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த முட்டைகள், இறைச்சி, மீன் போன்றவற்றின் விலை 0.37 சதவீதம் குறைந்துறாள்ளது. அதே சமயம் பழங்களின் விலை 8.49 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|