பதிவு செய்த நாள்
16 பிப்2018
00:10

பெங்களுரு:‘‘மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கும் திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது,’’ என, ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் அனந்த குமார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
மத்திய அரசு, மருந்து விலை கட்டுப்பாட்டு அமைப்பில், மிகப் பெரிய அளவில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. அத்துடன், 50 கோடி பேர் பயன்பெறும் வகையில், ‘நமோகேர்’ மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதையொட்டி, புதிய மருந்து கொள்கை உருவாக்கப்படும். மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தனி அமைச்சகம்ஏற்படுத்த வேண்டும் என, நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
இது தொடர்பாக, விரைவில், அமைச்சக அதிகாரிகள், பிரதமருடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.நமோகேர் போன்ற பிரமாண்ட திட்டத்தை செயல்படுத்த, மருந்து மற்றும் மருத்துவ
உபகரணங்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். அத்துடன், அத்தியாவசிய மருந்துகளின் விலையை நிர்ணயிக்கும்,மருந்து விலை கட்டுப் பாட்டு அமைப்பிலும்
மாற்றங்கள் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|