பதிவு செய்த நாள்
16 பிப்2018
00:11

புதுடில்லி:மத்திய அரசு, ஜி.டி.பி.,எனப்படும் மொத்த உள்நாட்டு
உற்பத்தி, ஐ.ஐ.பி., என்ற, தொழில் துறை உற்பத்தி ஆகியவற்றை
கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டை மாற்ற திட்டமிட்டுள்ளது.
தற்போது, 2011 – -12ம் நிதியாண்டை அடிப்படையாக கொண்டு, ஜி.டி.பி., ஐ.ஐ.பி., ஆகியவை மதிப்பிடப்படுகின்றன. இனி, இவை, நடப்பு 2017- – 18ம் நிதியாண்டின் அடிப்படையில்,
கணக்கிடப்படும்.அதுபோல,
சி.பி.ஐ., எனப்படும், சில்லரை விலை பணவீக்க கணக்கீட்டிற்கான,
அடிப்படை ஆண்டு, 2012ல் இருந்து, 2018ஆக மாற்றப்பட உள்ளது.
இந்த மாற்றங்கள், இந்த ஆண்டு இறுதியில் அமலுக்கு வரும் என, தெரிகிறது.‘‘நாட்டின்
பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு நெருக்கமான
பிரதிபலிப்பாக, ஜி.டி.பி., ஐ.ஐ.பி., சி.பி.ஐ., புள்ளி விபரங்கள்
இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவற்றை கணக்கிடுவதற்கான
அடிப்படை ஆண்டுகளை மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது,’’ என, மத்திய
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துஉள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|