பதிவு செய்த நாள்
16 பிப்2018
00:13

புதுடில்லி:உணவுப்
பொருட்கள் விலை குறைவால், நாட்டின் மொத்த விலை பணவீக்கம்,
இந்தாண்டு, ஜனவரியில், 2.84 சதவீதமாக சரிவடைந்தது. இது, முந்தைய
ஆறு மாதங்களில் இல்லாத அளவாகும். இதற்கு முன், 2017, ஜூலையில்,
பணவீக்கம், 1.88 சதவீதம் என்ற அளவில், மிகக் குறைவாக இருந்தது.
2017 ஜனவரியில், 4.26 சதவீதம்; டிசம்பரில், 3.58 சதவீதம் என்ற அளவில், மொத்த விலை பண
வீக்கம் காணப்பட்டது.உணவுப் பொருட்களின் விலை குறைந்த காரணத்தினால், மொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளது.ஜனவரியில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், 3 சதவீதமாக குறைந்துள்ளது. இது, டிசம்பரில், 4.72 சதவீதமாக இருந்தது.
காய்கறிகள் பணவீக்கம், 40.77 சதவீதமாக இருந்தது. வெங்காயம் விலை, 193.89 சதவீதம் உயர்ந்து உள்ளது.பருப்பு, கோதுமை மற்றும்
தானியங்கள் விலை, வெகுவாக குறைந்ததால், முறையே, 30.43, 6.94
மற்றும், 1.98 சதவீதம் என்ற அளவில், பணச்சுருக்கம்
ஏற்பட்டுள்ளது.
முட்டை, மாமிசம், மீன் ஆகியவற்றின் பணவீக்கம்,
1.67 சதவீதத்தில் இருந்து, 0.37 சதவீதமாக குறைந்துள்ளது; பழங்கள்
விலை, 8.49 சதவீதம் அதிகரித்துள்ளது.
தயாரிப்பு பொருட்கள்
பணவீக்கம், 2.78 சதவீதமாக காணப்பட்டது. எரிபொருள் மற்றும் மின்
துறை பணவீக்கம், 4.08 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இதனிடையே,
2017 நவம்பர் மாத மொத்த விலை பணவீக்கம், 4.02 சதவீதத்தில் இருந்து,
3.93 சதவீதமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய
புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி, சில்லரை
பணவீக்க அடிப்படையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால
கடனுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறது. ஜனவரியில்,
சில்லரை விலை பணவீக்கம், 5.07 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|