பதிவு செய்த நாள்
16 பிப்2018
00:23

மும்பை:'அடுத்த மூன்று ஆண்டுகளில், 'ஆன்லைன்' நுகர்வோரின் செலவினம், இரண்டரை மடங்கு உயர்ந்து, 6.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்' என, ஆய்வொன்றில்
தெரியவந்துள்ளது.
வலைதளங்கள் வாயிலாக பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவோர், 'ஆன்லைன்' நுகர்வோர் ஆவர். அத்தகையோரின் செலவினம் குறித்து, கூகுளுடன் இணைந்து, பாஸ்டன் கன்சல்டிங் குரூப் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:
இந்தியாவில், வலைதளம் வாயிலான மின்னணு வர்த்தகம் பரவலாகி வருகிறது. இதில், நிதிச் சேவைகள், சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறைகளின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. 'டிஜிட்டல்' எனப்படும் மின்னணு தொழில்நுட்பம் சார்ந்த ஊடகங்களின் பயன்பாடும் பெருகியுள்ளன.
அதனால், வலைதளங்கள் வாயிலான நுகர்வோரின் செலவு, 2020ல், தற்போது உள்ளதை விட, இரண்டரை மடங்கு உயர்ந்து, 4,000 கோடி டாலரில் இருந்து, 10 ஆயிரம் கோடி டாலராக, அதாவது, ரூபாய் மதிப்பில், 6.50 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.
இதில், ஆடைகள், ஆரோக்கிய பராமரிப்பு பொருட்கள், நுகர்வோர் மின்னணு சாதனங்கள், உணவு மற்றும் மளிகைப் பொருட்கள், பெரும் பங்கு வகிக்கும்.இப்பிரிவில், நுகர்வோரின் செலவினம் தற்போது, 1,800 கோடி டாலராக உள்ளது. இது, 2020ல், 4,000 -- 4,500 கோடி டாலராக உயரும்.இதே காலத்தில், சுற்றுலா மற்றும் ஓட்டல்களுக்கு, வலைதளம் வாயிலாக பணம் செலுத்துவது, 1,100 கோடி டாலரில் இருந்து, 2,000 கோடி டாலராக அதிகரிக்கும்.
மின்னணு ஊடகங்களுக்கு, நுகர்வோர் செலவிடுவது, 20 கோடி டாலரில் இருந்து, 57 கோடி டாலராக வளர்ச்சி காணும்.குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள், அவற்றில் பெரும்பாலான மொழிகளில் கிடைக்கும் தகவல்கள் போன்றவற்றால், வலைதளங்களை பார்வையிடுவோர்
அதிகரித்துள்ளனர். இதன் காரணமாக, நான்கு ஆண்டுகளில், வலைதளங்களை பயன்
படுத்துவோர் எண்ணிக்கை, இரு மடங்கு உயர்ந்து, 43 கோடியாக பெருகி உள்ளது.
இது, மேலும் வளர்ச்சி காண, சிறிய நகரங்களில் உள்ள பெண்கள் மற்றும் 35 வயதிற்கும் மேற்பட்டோர் துணை புரிவர்; வலைதள பொருட்களை வாங்குவதில், இத்தகையோரின் பங்கு, 2020ல், முறையே, 2.5 மற்றும் 3 மடங்கு அதிகரிக்கும்.பெருநகரங்களை தாண்டி, சிறிய நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பெருகியுள்ளதால், வலைதளங்களில் அதிகமானோர் பொருட்கள் வாங்குகின்றனர்.
வலைதளங்களில் பொருட்கள் வாங்கினாலும், 20 சதவீதம் பேர் தான், மொத்த செலவில், 60 - -65 சதவீதம், மின்னணு பணப் பரிவர்த்தனைகளை பயன்படுத்துகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வளர்ச்சி
நுகர்வோர்கள், வலைதளங்கள் குறித்த விழிப்புணர்வை பெற்று, தற்போது முதல்
பொருளை வாங்குவது வரை முன்னேறியுள்ளனர். அடுத்து, அவர்கள் சர்வசாதாரணமாக,
வலைதள பொருட்கள் வாங்குவோராக மாற வேண்டும். இப்படி, ஒவ்வொரு கட்டத்திற்கும் வெவ்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டால், வலைதள வர்த்தகம் வளர்ச்சி காணும்
நிமிஷா ஜெயின்
இயக்குனர், பி.சி.ஜி., இந்தியா
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|