பதிவு செய்த நாள்
16 பிப்2018
15:53

மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள உயர்வின் காரணமாக நேற்று முதல் உயர்வுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், இன்றைய பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிவை சந்தித்தன.
நாட்டின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான, பிரபல நகைக் கடை உரிமையாளர் நிரவ் மோடி, 46, உள்ளிட்டோர், பஞ்சாப் நேஷனல் வங்கியின், மும்பை கிளையில், அதிகாரிகள் உதவியுடன், 280 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அந்த வங்கி புகார் கொடுத்தது. இந்த நிதி மோசடி அம்பலமானதை அடுத்து, எஸ்பிஐ உள்ளிட்ட பல வங்கிகளிலும் ரூ.11,000 கோடி அளவிற்கு நிதி மோசடி நடந்துள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து வங்கித்துறை பங்குகள் சரிய துவங்கின.
பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகள் 2 சதவீதமும், எஸ்பிஐ வங்கி பங்குகள் 3 சதவீதமும் சரிந்துள்ளன. இதனையடுத்து பிற்பகல் வர்த்தகத்தின் போது பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்தன. இதன் காரணமாக இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, சென்செக்ஸ் 286.71 புள்ளிகள் சரிந்து 34,010.76 புள்ளிகளாகவும், நிப்டி 94.30 புள்ளிகள் சரிந்து 10,451.20 புள்ளிகளாகவும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|