மாலைநேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லைமாலைநேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை ... பசுமை வாகனத்திற்கு முக்கியத்துவம் தேசிய வாகன கொள்கை வரைவு அறிக்கை வெளியீடு பசுமை வாகனத்திற்கு முக்கியத்துவம் தேசிய வாகன கொள்கை வரைவு அறிக்கை ... ...
கடையாணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2018
05:14

டி.வி.எஸ்.,
முதல், ‘க்ரூ­சர்’ பைக்டி.வி.எஸ்., நிறு­வ­னம், தன் முதல், ‘க்ரூ­சர்’ ரக பைக்கை, விரை­வில் அறி­மு­கப்­ப­டுத்த உள்­ளது. முன்­ன­தாக, டில்லி, ‘ஆட்டோ எக்ஸ்போ’ கண்­காட்­சி­யில், இதை அந்­நி­று­வ­னம் காட்­சிப்­ப­டுத்தி உள்­ளது.இதில், வெர்ட்­டிக்­கல், எல்.இ.டி., ஹெட்­லேம்ப் இடம் பெற்­றுள்­ளது. மேலும், டி.வி.எஸ்., நிறு­வ­னத்­தின், ‘ஆர்.ஆர்., 310’ பைக்­கில் இருப்­பதை போன்ற, ஸ்டை­லான, ‘யு.எஸ்.டி., போர்க், சுவிட்ச் கியர்’ என, கவர்ச்­சி­யான அம்­சங்­கள் உள்ளன.பைக்­கின் பின்­பு­றத்தை பார்த்­தால், ‘பஜாஜ், டோமி­னார் 400’ பைக்­கில் இருப்­பதை போல் தோற்­றம் அளிக்­கிறது. பின்­னி­ருக்­கை­யில் அம­ரு­ப­வ­ருக்கு வச­தி­யாக, இருக்கை சற்று தாழ்­வாக வடி­வ­மைக்­கப்­பட்டு உள்­ளது. இதில், 20 எச்.பி., திறனை உற்­பத்தி செய்­யும், 220 ‘சிசி’ சிங்­கிள் சிலிண்­டர் இன்­ஜின், ஐந்து கியர்­கள் உள்ளன. கால்­களை முன்­பு­றம் வச­தி­யாக நீட்டி வைத்து, ஓட்­டும் வகை­யில் வடி­வ­மைக்­கப்­பட்டு உள்­ளது.மேலும் இதில், 300 எம்.எம்., முன்­புற டிஸ்க்; 240 எம்.எம்., பின்­புற டிஸ்க்­கு­டன் கூடிய, ‘ஆன்டி லாக் பிரேக்­கிங்’ வசதி; 20 லி., கொள்­ள­ளவு உடைய டேங்க் என, அனைத்­தும் அசத்­த­லாக உள்ளன. பார்ப்­ப­தற்கு அம்­ச­மாக இருந்­தா­லும், இதை வர்த்­தக ரீதி­யாக தயா­ரிப்­பது சவா­லான விஷ­யம் தான். இருப்­பி­னும், துணிந்து இறங்கி இருக்­கிறது, டி.வி.எஸ்., நிறு­வ­னம்.
ஹோண்டா
‘எக்ஸ் பிளேடு’ முன்­ப­திவுடில்லி, ‘ஆட்டோ எக்ஸ்போ
’ கண்­காட்­சி­யில், ‘ஹோண்டா டூ – வீலர்ஸ் இந்­தியா’ நிறு­வ­னத்­தின், புதிய, 160 ‘சிசி’ பைக், ‘எக்ஸ் பிளேடு’ காட்­சிப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. அதற்கு, நல்ல வர­வேற்பு கிடைத்­த­தால், அந்த பைக்கை, சந்­தை­யில் விற்­ப­தற்­கான முன்­ப­திவை, ஹோண்டா துவக்கி உள்­ளது.இந்த பைக்கை, ஹோண்டா டீலர்­க­ளி­டம் முன்­ப­திவு செய்­ய­லாம். இதன் டில்லி ஷோரூம் விலை, 79 ஆயி­ரம் ரூபா­யில் இருந்து துவங்­கு­கிறது. இதன் விற்­பனை, மார்ச்­சில் துவங்க உள்­ளது.இதில், முதன்­மு­றை­யாக, எல்.இ.டி., ஹெட் லைட் இடம் பெற்­றுள்­ளது. மேலும், ‘சுப்­பீ­ரி­யர் எச்.டி., இன்­ஜின், மோனோ ஷாக் சஸ்­பென்­ஷன், 130 எம்.எம்., பின்­பக்க டயர், கியர் பொசி­ஷன் இண்­டி­கேட்­டர்’ போன்ற பல அம்­சங்­கள் உள்ளன. இது, ஐந்து நிறங்­களில் கிடைக்­கும்.

யு.எம்., ரென­கேட்
‘தோர்’ அறி­மு­கம்தன், ‘ரென­கேட்’ மாடல், ‘க்ரூ­சர்’ ரக பைக்­கு­க­ளால், இந்­திய பைக் பிரி­யர்­களை அசத்தி வரும், ‘யு.எம்., மோட்­டார் சைக்­கிள்ஸ்’ நிறு­வ­னம், ‘பேட்­டரி’யால் இயங்­கும், எலக்ட்­ரிக் பைக்கை அறி­மு­கம் செய்­துள்­ளது.இந்த, ரென­கேட், ‘தோர்’ பைக்கை, டில்லி, ‘ஆட்டோ எக்ஸ்போ’வில், அந்­நி­று­வ­னம் காட்­சிப்­ப­டுத்தி உள்­ளது. இது, அந்­நி­று­வ­னத்­தின், முதல் எலக்ட்­ரிக் மோட்­டார் பைக். மற்ற நிறு­வ­னங்­கள், எலக்ட்­ரிக் ஸ்கூட்­ட­ரில் கவ­னம் செலுத்­தும் நிலை­யில், யு.எம்., க்ரூ­சர் பைக்­கில், அதை அறி­மு­கம் செய்ய முடி­வெ­டுத்­துள்­ளது.இதில், ஐந்து கியர்­க­ளு­டன் இணைக்­கப்­பட்ட, 30 கிலோ­வாட் மோட்­டார் பொருத்­தப்­பட்டு உள்­ளது. இந்த பேட்­ட­ரியை முழு­மை­யாக சார்ஜ் செய்­தால், 270 கி.மீ., வரை, நிற்­கா­மல் ஓடு­மாம். 40 நிமி­டங்­க­ளுக்­குள், பேட்­ட­ரியை, 80 சத­வீ­தம் சார்ஜ் செய்­யும் வசதி உண்டு. இதன் ஷோரூம் விலை, 9.9 லட்­சம் ரூபா­யில் துவங்­கு­கிறது. முன்­ப­திவு துவங்­கிய போதும், ஏப்­ர­லில் தான் சந்­தைக்கு வரு­கிறது.

மெர்­சி­டெஸ் பென்ஸ்

புதிய, ‘எஸ்.கிளாஸ்’வரும், 2020ல் இருந்து, இந்­தி­யா­வில் உற்­பத்­தி­யா­கும் அனைத்து வாக­னங்­க­ளி­லும், பி.எஸ்., – 6 சுற்­றுச்­சூ­ழல் விதி­க­ளுக்கு பொருந்­தக்­கூ­டிய, இன்­ஜின்­கள் தான் பொருத்­தப்­பட வேண்­டும். அதற்கு, முன்­கூட்­டியே தயா­ராகி விட்­டது, ‘மெர்­சி­டெஸ் பென்ஸ்’ நிறு­வ­னம்.இந்­நி­று­வ­னம், இந்­தி­யா­வில் தயா­ரான முதல்,பி.எஸ்., – 6 இன்­ஜி­னு­டன் கூடிய காரை வடி­வ­மைத்து உள்­ளது. இதை, இந்­நி­று­வ­னம் விரை­வில் அறி­மு­கம்செய்ய உள்ள, ‘எஸ்.கிளாஸ் பேஸ்­லிப்ட்’ காரில் பொருத்தி உள்­ளது.இந்த, எஸ்.கிளாஸ் பேஸ்­லிப்­டில், 286 எச்.பி., திறனை உரு­வாக்­கும், ஆறு சிலிண்­டர் இன்­ஜின் பொருத்­தப்­பட்டு உள்­ளது.இந்­தி­யா­வில், பி.எஸ்., – 6 வகை இன்­ஜி­னுக்­கேற்ற டீசல் விற்­ப­னைக்கு இல்லை என்­றா­லும், பி.எஸ்., – 4 வாக­னங்­க­ளுக்­கான எரி­பொ­ரு­ளில், இதை இயக்க முடி­யும். இந்த புதிய கார், பிப்., 26ல், சந்­தைக்கு விற்­ப­னைக்கு வர­வுள்­ளது.



இந்­தியா வரு­கிறது பி.எம்.டபிள்யு.,‘எக்ஸ் 4’
ர­பல சொகுசு கார் தயா­ரிப்புநிறு­வ­ன­மான, பி.எம்.டபிள்யு., இரண்­டா­வது தலை­முறை, ‘எக்ஸ் 4’ எஸ்.யு.வி.,யை, இந்­தி­யா­வில் விரை­வில் அறி­மு­கம் செய்ய உள்­ளது. இதன் மேற்­கூரை, ‘கூபே’ கார்­களில் உள்­ளதை போல் காணப்­ப­டு­கிறது.இது அதன், ‘எக்ஸ் 3, எக்ஸ் 5’ ஆகிய, எஸ்.யு.வி.,களுக்கு இடைப்­பட்­ட­தாக இருக்­கும். 2014ல், முதல் தலை­முறை, ‘எக்ஸ் 4’ எஸ்.யு.வி., அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட போது, அது, இந்­தி­யா­வில் விற்­ப­னைக்கு வர­வில்லை. எனி­னும், அதன் அடுத்த தலை­முறை, ‘எக்ஸ் 4’ இங்கு கால் பதிக்க உள்­ளது.சுவிட்­சர்­லாந்­தின், ஜெனீ­வா­வில், விரை­வில் நடக்­க­வி­ருக்­கும், ‘ஆட்டோ எக்ஸ்போ’ கண்­காட்­சி­யில், இந்த கார் காட்­சிப்­ப­டுத்­தப்­பட உள்­ளது. இந்­தி­யா­வில், இந்தாண்டு இறு­திக்­குள் விற்­ப­னைக்கு வர­வுள்­ளது. அதற்கு முன், ‘எக்ஸ் 3’ மே மாதத்­தில் அறி­மு­க­மாக உள்­ளது.இந்­தி­யா­வில், ‘எக்ஸ் 4’ இன்­ஜினை பொறுத்­த­வரை, ‘எக்ஸ் 3’ல் இடம் பெற உள்ள, இன்­ஜினே இடம் பெறும் என, தெரி­கிறது. எனி­னும், உல­கச் சந்­தை­யில், வேறு இன்­ஜின்­கள் பொருத்­தப்­பட்டு விற்­கப்­ப­டு­மாம்.இந்­தியா வர­வி­ருக்­கும் இந்த, ‘போர் வீல் டிரைவ்’ மாட­லில், 252
எச்.பி., திறனை உரு­வாக்­கும், ‘எக்ஸ் டிரைவ் 30ஐ’ நான்கு சிலிண்­டர் பெட்­ரோல் இன்­ஜின், 190 எச்.பி., திறனை உரு­வாக்­கும், ‘எக்ஸ் டிரைவ் 20டி’ நான்கு சிலிண்­டர் மற்­றும் 265 எச்.பி., திற­னு­டைய, ‘எக்ஸ் டிரைவ் 30டி’ ஆறு சிலிண்­டர் டீசல் ஆகிய, வகை இன்­ஜின்­கள் இடம் பெறும் என, தெரி­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)