பி.என்.பி., மோசடி விவகாரம் தங்கம், நவரத்தினங்கள் துறை பாதிப்புபி.என்.பி., மோசடி விவகாரம் தங்கம், நவரத்தினங்கள் துறை பாதிப்பு ... பங்குச் சந்தை: மாற்­றம் ஒன்றே மருந்து பங்குச் சந்தை: மாற்­றம் ஒன்றே மருந்து ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
02:29

கச்சா எண்ணெய்:
கச்சா எண்­ணெய், முந்­தைய வார சரி­வுக்கு பின், கடந்த வாரம் உயர்ந்து வர்த்­த­க­மா­கி­யது. சர்­வ­தேச பங்­குச் சந்­தை­களில் ஏற்­பட்ட மாற்­றம் மற்­றும் அமெ­ரிக்க நாண­யத்­தின் மதிப்­புக் குறைவு போன்ற கார­ணங்­க­ளால் எண்­ணெய், விலை உயர்­வினை கண்­டது.
இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பின், தொடர்ந்து ஆறு நாட்­க­ளாக பங்­குச் சந்­தை­யில் விலை ஏற்­றம் காணப்­ப­டு­கிறது.உல­கின் மிகப் பெரிய எண்­ணெய் உற்­பத்தி நாடும், ஒபெக் அமைப்­பின் முக்­கிய உறுப்பு நாடு­மான, சவுதி அரே­பி­யா­வின் எரி­சக்தி அமைச்­ச­கம், கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது. அதில், கச்சா எண்­ணெய் உற்­பத்தி குறைப்பு நட­வ­டிக்கை ஒப்­பந்­தம், வரும் டிசம்­பர், 2018 வரை சரி­வர கடை­பி­டிக்­கப்­படும் என, தெரி­வித்­துள்­ளது. தேவைப்­பட்­டால் மீண்­டும் ஒரு உற்­பத்தி குறைப்பு பற்றி சிந்­திக்க இருப்­ப­தா­க­வும் தெரி­வித்­தது.
இந்த அறி­விப்பு வந்­த­வு­டன், வரும் காலத்­தில் தட்­டுப்­பாடு நில­வும் என்ற கோணத்­தில், பொருள் வாணிப சந்­தை­யில் விலை உயர்வு ஏற்­பட்­டது. எம்.சி.எக்ஸ்., பொருள் வாணிப சந்­தை­யில், ஒரு பேரல் கச்சா எண்­ணெய், 230 உயர்ந்து, 3,975 ரூபாய் என்ற நிலையை எட்­டி­யது. இந்­திய கச்சா எண்­ணெய் இறக்­கு­மதி, வர­லாற்று உச்­சத்தை தொட்­டது. சுத்­தி­க­ரிப்பு நிறு­வ­னங்­களின் செயல்­தி­றன் அதி­க­ரிப்பு மற்­றும் உள்­நாட்­டின் பெட்­ரோ­லிய பொருட்­களின் தேவை அதி­க­ரிப்பு ஆகி­யவை, நம் நாட்­டின் இறக்­கு­மதி அதி­க­ரிக்க கார­ண­மா­கும்.
கடந்த ஜன­வரி மாதம், மொத்த இறக்­கு­மதி, தின­சரி, 4.93 மில்­லி­யன் பேரல்­கள் ஆகும். இது முந்­தைய டிசம்­பர் மாதத்தை விட, 13.6 சத­வீ­தம் அதி­கம். மேலும், கடந்த ஆண்டு ஜன­வரி மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில், 12.5 சத­வீ­தம் அதி­க­மா­கும். பெட்­ரோல் உப­யோ­கம், 15.6 சத­வீ­த­மும், டீசல் உப­யோ­கம், 14.5 சத­வீ­த­மும் கடந்த மாதத்­தில் அதி­க­ரித்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 3,928 3,890 4,063 4,150என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 60.30 59.50 62.40 63.20

தங்கம், வெள்ளி
இரு வார சரி­வுக்­குப் பின், தங்­கம் மற்­றும் வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை, கடந்த வாரம் அதி­க­ரித்து வர்த்­த­க­மா­கி­யது.
அமெ­ரிக்க நாணய குறி­யீ­டான, டாலர் இண்­டக்ஸ், அதன் மதிப்பு சரிந்து, மூன்று ஆண்டு குறை­வில் வர்த்­த­க­மான நிலை­யில், தங்­கம் உட்­பட பல பொருட்­களின் விலை, பொருள் வாணிப சந்­தை­யில் உயர்வை கண்டது.பொது­வா­கவே தங்­கம் மற்­றும் வெள்ளி விலை, அமெ­ரிக்க நாண­யத்­தின் மதிப்பு உய­ரும்­போது விலை குறை­வ­தும், நாணய மதிப்பு சரி­யும் போது விலை உயர்­வ­தும் வழக்­க­மான போக்­கா­கும்.தங்­கம் கடந்த வாரம் மட்­டும், 3 சத­வீ­தம் அதி­க­ரித்து, 2017 அக்­டோ­பரை விட உயர்ந்­தது. பிளாட்­டி­னம் விலை­யும், 6.8 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது.
கடந்த வாரம் வெளி­வந்த, அமெ­ரிக்க பொரு­ளா­தார கார­ணி­க­ளான பண­வீக்க விகி­தம் உய­ரும் என்ற எதிர்­பார்ப்­பும், வியா­ழன் அன்று வெளி­வந்த வேலை­யில்­லா­தோ­ருக்­கான ஊக்­கத் தொகை பெறும் நபர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­பும், அமெ­ரிக்க நாணய மதிப்பு சரிய கார­ண­மா­கி­யது. எஸ்.பி.டி.ஆர்., எனப்­படும், உல­கின் மிகப்­பெ­ரிய தங்க முத­லீட்டு பண்­டின் இருப்பு அளவு சிறிது குறைந்­துள்­ளது. கடந்த வியா­ழன் அன்று இதன் இருப்பு, 823.66 டன் என்­ப­தில் இருந்து, 821.30 டன் ஆக குறைந்­தி­ருந்­தது. உள்­நாட்டு சந்­தை­யில் தங்­கம், 10 கிராம், 30,810 ரூபாய் என்ற நிலை­யில் வர்த்­த­க­மா­கி­யது.
உலக தங்க கவுன்­சில் அறிக்­கை­யின்­படி, இந்­தி­யா­வின் தங்க தேவை, கடந்த, 10 ஆண்­டு­களின் சரா­சரி தேவையை விட, தொடர்ந்து மூன்­றா­வது ஆண்­டாக இந்த ஆண்­டும் அதிகரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அதி­க­ரித்து வரும் தங்­கம் இறக்­கு­மதி வரி, தங்­கம் வாங்­கு­வ­தில் விதிக்­கப்­பட்ட புதிய கொள்­கை­கள், தங்­கம் அட­மா­னத்­தில் கொண்டு வரப்­பட்ட விதி­மு­றை­கள் போன்­றவை கார­ண­மாக தேவை குறைந்து வரு­கிறது. ஜன­வரி இறக்­கு­மதி, 37 சத­வீ­தம் குறைந்­துள்­ளது.
தங்கம்:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 30,570 30,410 30,990 31,300காம்எக்ஸ் (டாலர்) 1,338 1,325 1,370 1,383

வெள்ளி:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 38,500 38,060 38,910 39,600காம்எக்ஸ் (டாலர்) 16.35 15.90 16.95 17.40

செம்பு:
செம்பு விலை கடந்த வாரம், எம்.சி.எக்ஸ்., பொருள் வாணிப சந்­தை­யில், 1 கிலோ, 30 ரூபாய் உயர்ந்து, 464.10 வரை எட்­டி­யது.
இது, முந்­தைய ஆறு வார சரி­வுக்கு பின், ஏற்­பட்ட நல்ல விலை­யேற்­றம் ஆகும். உலக பங்­குச் சந்­தை­களின் உயர்­வும், அமெ­ரிக்க நாண­யத்­தின் மதிப்பு சரிவும், செம்பு விலை உயர கார­ண­மா­கி­யது. செம்பு விலை­யு­டன், பிற தொழிற்­சாலை கனி­மங்­களின் விலை­யும் உயர்ந்து காணப்­பட்­டது. துத்­த­நா­கம் விலை, 2007ம் ஆண்­டின் உயர்­வைக் காட்­டி­லும் உயர்ந்­தது. நிக்­கல் அதன் மூன்று ஆண்டு உச்­சத்தை தொட்­டது. வரும் நாட்­க­ளி­லும் இந்த நிலை தொட­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 445.00 438.00 463.00 470.00

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)