பி.என்.பி.,: விடை தெரியா கேள்­வி­கள்பி.என்.பி.,: விடை தெரியா கேள்­வி­கள் ... பி.பி.எப்., முத­லீடு அளிக்கும் பல­ன்கள் பி.பி.எப்., முத­லீடு அளிக்கும் பல­ன்கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
புதிய நக­ருக்கு குடி­பெ­யரும் முன் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
02:35

பதவி உயர்வு அல்­லது உயர் கல்வி தேவைக்­காக, தற்­போது வசிக்கும் நகரில் இருந்து புதிய நக­ருக்கு குடி­பெ­யரும் தேவை ஏற்­ப­டலாம். இவ்­வாறு வேறு நக­ருக்கு செல்லும் போது, நிலு­வையில் உள்ள கட்­ட­ணங்­களை செலுத்­து­வது, பொருட்­களை பேக் செய்­வது, ஆவ­ணங்­களை தயார் செய்­வது போன்ற, பல அம்­சங்­களில் கவனம் செலுத்த வேண்டும். இவற்றை எளி­தாக திட்­ட­மி­டு­வ­தற்­கான யோச­னைகள்:
பொருட்­களின் பட்­டியல்: பொருட்­களை கொண்டு செல்ல, தொழில்­ முறை பேக்­கேஜிங் சேவையை பயன்­ப­டுத்­தி­னாலும், பொருட்கள் மற்றும் அவை அடங்­கிய பெட்­டி­க­ளுக்­கான பட்­டி­யலை முத­லி­லேயே தயார் செய்து கொள்ள வேண்டும். பொருட்­களின் பட்­டி­யலை கையில் வைத்­தி­ருப்­பதன் மூலம், அவை எல்லாம் வந்து சேர்ந்­து­விட்­டதை உறுதி செய்து கொள்­ளலாம். புதிய இடத்­திற்கு சென்ற பின், எந்த ஒரு பொருளும் காணாமல் போய் திண்­டா­டு­வதை இதன் மூலம் தவிர்க்­கலாம்.
காப்­பீடு வசதி: பய­ணங்­களை மேற்­கொள்ளும் போது காப்­பீடு பெறு­வது போலவே, பொருட்­களை போக்­கு­வ­ரத்து மூலம் கொண்டு செல்­வ­தற்கும் காப்­பீடு பெறலாம். மனித தவ­றுகள் அல்­லது எதிர்­பாராத கார­ணங்­க­ளினால் போக்­கு­வ­ரத்தின் போது முக்­கிய பொருட்­க­ளுக்கு சேதம் ஏற்­படும் வாய்ப்பு இருக்­கி­றது. காப்­பீடு பெறு­வதன் மூலம், இதனால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்பை ஈடுசெய்­யலாம்.
ஆவ­ணங்கள் பட்­டியல்: பொருட்­களை பேக் செய்யும் போது, முக்­கிய ஆவ­ணங்­க­ளையும் எடுத்து வைக்க மறக்க கூடாது. அதை­விட முக்­கி­ய­மான அம்சம், இவற்றை பொருட்­க­ளோடு அனுப்பி வைப்­பதை தவிர்ப்­ப­தாகும். பாஸ்போர்ட், பயண ஆவ­ணங்கள், காப்­பீடு ஆவணம் ஆகி­ய­வற்றை நம்­மி­டமே வைத்­தி­ருக்க வேண்டும். தேவைப்­படும் நேரத்தில் இவற்றை பயன்­ப­டுத்­திக் ­கொள்­ளலாம்.
முக்­கிய பொருட்கள்: ஆவ­ணங்கள் தவிர குறிப்­பிட்ட சில முக்­கிய பொருட்­க­ளையும் பயணம் செய்­பவர் தன்­னி­டமே வைத்­தி­ருப்­பது அவ­சியம். ரொக்­கப்­பணம், பர்ஸ், கிரெடிட் கார்­டுகள், டெபிட் கார்­டுகள், கேமரா, மொபைல் போன்கள், நகைகள், கைக­டி­கா­ரங்கள், லேப் – டாப் போன்ற பொருட்­களை நம் வசம் வைத்­தி­ருக்க வேண்டும். இவற்­றுக்கும் முத­லி­லேயே ஒரு பட்­டியல் போட்டி வைத்­துக்­கொள்ள வேண்டும்.
பயண திட்டம்: பயண நேரம் மற்றும் சென்­ற­டையும் நேரம் ஆகி­யவை குறித்து தெளி­வாக அறிந்­தி­ருக்க வேண்டும். பொது­ வாக நக­ருக்கு சென்­ற­டையும் போது, பொருட்கள் வந்து சேர்ந்தால் நன்­றாக இருக்கும். ஆனால் பய­ணத்தின் நடுவே எதிர்­பா­ராத தாமதம் ஏற்­பட வாய்ப்­பி­ருக்­கி­றது. எனவே வாகனம் எப்­போது வந்து சேரும் என்­பதை தெரிந்து கொள்­ளவும். குடி­யி­ருப்பு பகு­தியில் பொருட்­களை கொண்டு செல்ல உரிய வசதி இருக்­கி­றதா என்­ப­தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)