பதிவு செய்த நாள்
22 பிப்2018
02:52

வாஷிங்டன் : நாட்டில் உள்ள, பெண் தொழில் முனைவோரை ஒருங்கிணைத்து, அவர்களின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு, தனி பிரிவு துவக்கப்பட உள்ளது.பெண்கள் முன்னேற்றத்திற்கான இத்திட்டம் குறித்த, அதிகாரபூர்வ அறிவிப்பை, மத்திய அரசின் கொள்கை திட்டங்களை வகுக்கும், ‘நிடி ஆயோக்’ அமைப்பு, விரைவில் வெளியிட உள்ளது.கடந்த ஆண்டு நவம்பரில், ஆந்திர மாநிலம், ஐதராபாதில், சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெற்றது. இதில், அமெரிக்க அதிபர், டிரம்பின் மகளும், அவரின் ஆலோசகருமான, இவாங்கா டிரம்ப் பங்கேற்றார். அவரது அழைப்பை ஏற்று, இந்தியாவில் இருந்து, இரண்டு டஜனுக்கும் அதிகமான பெண் தொழில் முனைவோர், அமெரிக்காவிற்கு வர்த்தக பயணம் மேற்கொண்டு உள்ளனர்.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும், நவீன தொழில்நுட்பங்கள் சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு, அமெரிக்க தலைநகர், வாஷிங்டனில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில், விருந்து அளிக்கப்பட்டது.இதில், ‘நிடி ஆயோக்’ உறுப்பினர், அன்னா ராய் பேசியதாவது:இந்தியாவில் உள்ள பெண் தொழில் முனைவோர் எண்ணிக்கை, வேகமாக அதிகரித்து வருகிறது. அவர்கள், பொது மற்றும் தனியார் துறைகளின் வளர்ச்சிக்கு, பெரும் பங்காற்றி வருகின்றனர்.எனவே, தற்போது பெண்களிடம், தொழில் துவங்குவதற்கான விழிப்புணர்வை எற்படுத்துவது தான் முக்கியம். நடைமுறையில் உள்ள பல்வேறு திட்டங்களை,பெண்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். அனைத்து துறைகளுக்கும் இணைப்பு வசதி ஏற்படுத்தி, ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும். தகுதியான கூட்டு நிறுவனங்களை தேர்வு செய்யும் வசதியை வழங்க வேண்டும். இந்த செயல்பாடுகளை தொடர்ந்து கிடைக்கும் பயன்களை ஒருங்கிணைத்து பார்த்தால், பெண் தொழில் முனைவோரும், நாடும், வளர்ச்சி கண்டிருப்பதை காண முடியும்.இந்த நோக்கத்திற்காக, ‘நிடி ஆயோக்’ அமைப்பு, பெண் தொழில் முனைவோருக்கு என, தனி பிரிவை துவக்க உள்ளது.இப்பிரிவு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த, பெண் தொழில் முனைவோரின் சங்கமமாக இருக்கும். அவர்கள், வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ளும் பொது தளமாக, இப்பிரிவு விளங்கும்.இந்தியாவில், தொழில் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்தி, அடுத்தகட்ட மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பெண் தொழில் முனைவோரை உருவாக்கவும், அவர்களின் வர்த்தகத்தை மேம்படுத்தவும், இதுவே சரியான தருணம்.இவ்வாறு அவர் கூறினார்.
சாதகமான அரசுமத்திய அரசு, பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் கொள்கை திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பெண்களுக்கு சாதகமாக உள்ளது. நான் பங்கேற்றுள்ள நிதித் துறையில், பெண் தொழில் முனைவோருக்கு எண்ணற்ற வாய்ப்புகளும், ஏராளமான அங்கீகாரங்களும் கிடைக்கின்றன.சீமா பிரேம் தலைமை செயல் அதிகாரி, எப்.ஐ.ஏ., டெக்னாலஜிஸ்
ஆண்களை விஞ்சுவர்இந்தியாவில், சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில், பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தொழில் துறையில், பிரத்யேக ஊக்குவிப்பு திட்டங்களும், வசதிகளும் அளிக்கப்பட்டால், அவர்கள் ஆண்களை விட, வேகமாக முன்னேறுவர்.நவ்தேஜ் சிங் சர்னா அமெரிக்காவுக்கான இந்திய துாதர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|