பதிவு செய்த நாள்
23 பிப்2018
02:26

புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத் டைனமிக்ஸ், ஐ.ஆர்.இ.டி.ஏ., எனப்படும், இந்தியன் ரினீவபிள் எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜன்சி ஆகிய நிறுவனங்கள், பங்கு வெளியீட்டுக்கு வர, ‘செபி’ ஒப்புதல் வழங்கி உள்ளது.கடந்த, 1970ல் துவங்கப்பட்ட பாரத் டைனமிக்ஸ் நிறுவனம், ஏவுகணை மற்றும் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. 1987ல் துவங்கப்பட்ட, வங்கி சாரா நிதி நிறுவனமான, ஐ.ஆர்.இ.டி.ஏ., புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு கடனுதவி வழங்கி வருகிறது.இந்நிறுவனங்கள், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’யிடம் விண்ணப்பித்து இருந்தன.இது தொடர்பான ஆவணங்களை பரிசீலித்த, ‘செபி’ அவற்றின் பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வழங்கி உள்ளது.‘பங்கு வெளியீட்டில்திரட்டப்படும் நிதி, எதிர்கால மூலதன தேவைகளை சமாளிக்கவும்; கடன் வழங்கவும்; வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும்’ என, ஐ.ஆர்.இ.டி.ஏ., தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|